செங்கல்பட்டில் அதிகாலையில் ஆம்னி பஸ்.. கோடி கோடியாக பணம்.. டோல்கேட்டில் வருமான வரித்துறை ட்விஸ்ட்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு 2.30 மணி அளவில் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் கோடிக்கணக்கில் பணம் செல்வதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நடந்த சோதனையில் 4.5 கோடி பணம் சிக்கியது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் செல்கின்றன. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும் 90 சதவீத பேருந்துகள் செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும். இந்த வழித்தடத்தில் இரவு தொடங்கி விடிய விடிய பேருந்துகள் சென்றபடி இருக்கும்.

சோதனை நடக்கும்
ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை ஒரே மாநிலத்திற்கு செல்பவை என்பதால் பெரியதாக சோதனைகள் இருக்காது. சந்தேகம் வந்தால் மட்டுமே போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அதேபோல் தான் வருமான வரித்துறையும் , ரகசிய தகவல் அடிப்படையில் தான் ஆம்னி பேருந்துகளை போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்துவார்கள்.
ஆம்னி பஸ்
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்னி பேருந்து சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
4.5 கோடி பணம் சிக்கியது
குறிப்பிட்ட ஆம்னி பேருந்தில் கோடிக்கணக்கில் பணம் எடுத்து செல்வதாக சென்னை வருமான வரி துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் ஆத்தூர் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு 2.30 மணி அளவில் ரெடியாக நின்றனர். போலீசார் உதவியுடன் பஸ்ஸில் திடீரென சோதனை நடத்தினர். இதில் கணேசன் என்பவரிடம் ரூ.4 கோடியும், அம்புரோஸ் என்பவரிடம் ரூ.50 லட்சமும் கைப்பற்றப்பட்டது.
பண்டல் பண்டலாக பணம்
முதல் கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. 2 பெரிய சூட்கேஸ் மற்றும் புத்தக பண்டல் போல் 2 பண்டல்கள் என நான்கை கைப்பற்றினார்கள். அப்போது பேருந்தை பஸ்சை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிறுத்தி சோதனை செய்ததால் பயணிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணேசன், அம்புரோஸ் ஆகியோரை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications