Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Iran Israel War: ஈரான் மீது தாக்குதல்! சென்னையிலிருந்து 14 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமை ஆறு, ஞாயிற்றுக்கிழமை ஒன்பது என மொத்தம் 15 புறப்படும் சேவைகள் ரத்தாகின. இதனால் பயணிகள் விமான நிலையத்தில் தவிப்புக்குள்ளானார்கள். துபாய், அபுதாபி, தோஹா போன்ற வழித்தடங்கள் இதில் அடங்கும்.

chennai airport flights to middle east cancelled

பஹ்ரைன், துபாய், அபுதாபியிலிருந்து சென்னைக்கு இரவு 8 மணி முதல் 8.40 மணிக்குள் வரவிருந்த மூன்று விமானங்களும் ரத்தாகின. மேலும், பிற்பகல் 2.20 மணிக்கு மஸ்கட்டிற்கு புறப்பட்ட ஓமன் ஏர் விமானம், மத்திய கிழக்கு வான்வெளி கட்டுப்பாடுகளால் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் அந்தச் சேவையும் ரத்தானது.

சனிக்கிழமை ரத்து செய்யப்பட்ட சேவைகளில், மாலை 4.10 மணிக்கு அபுதாபிக்குச் செல்லவிருந்த கத்தார் ஏர்வேஸ், இரவு 9.40 மணிக்கு அபுதாபிக்குச் செல்லவிருந்த எடிஹாட் ஏர்வேஸ், இரவு 9.45 மணிக்கு துபாய்க்குச் செல்லவிருந்த எமிரேட்ஸ் (முதலில் ஒத்திவைக்கப்பட்டு பிறகு ரத்து) ஆகியவை இடம்பெற்றன.

முக்கிய இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ, மத்திய கிழக்குக்கான விமானச் சேவைகளை ரத்து செய்வதாக உடனடி அறிவிப்பு வெளியிட்டன. சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு சென்னையிலிருந்து துபாய்க்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானமும் ரத்துசெய்யப்பட்டது.

ஏர் இந்தியா தனது அறிவிப்பில், மத்திய கிழக்கில் நிலவும் சூழலால் அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்துவதாகக் கூறியது. "பயணிகள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாதுகாப்புச் சூழலை தொடர்ந்து மதிப்பிட்டு, தேவைக்கேற்ப செயல்பாடுகளை மாற்றுவோம்," என்று குறிப்பிட்டது. சமீபத்திய தகவல்களுக்கு வலைத்தளத்தை சரிபார்க்கவும் எனப் பயணிகளுக்கு அறிவுறுத்தியது.

இண்டிகோ, மத்திய கிழக்கு மற்றும் சில சர்வதேச வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை சேவைகளை ரத்து செய்தது. புதுப்பிப்புகள் பதிவு செய்யப்பட்ட தொடர்பு விவரங்கள் மூலம் உடனடியாகத் தெரிவிக்கப்படும் என்றது. ஓமன் ஏர், ஏர் அரேபியா, எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட சர்வதேச விமான நிறுவனங்களும் பயணிகளைத் சமீபத்திய தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தின.

மஸ்கட் தனது விமானத் தகவல் மண்டலத்திற்குள் (FIR) நுழையும் விமானங்களை, அவை எமிரேட்ஸ் FIR-க்குச் செல்லும் பட்சத்தில் அனுமதிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. "மஸ்கட்டிலிருந்து ஜெட்டா (FIR) மண்டலத்திற்கு வெளியேறும் விமானங்களை மட்டுமே அது அனுமதித்தது, இது வான்வெளியில் நெரிசலை ஏற்படுத்தியது. திறன் வரம்புகளைக் காரணம் காட்டி தரையிறங்க அனுமதிக்காததால், இந்தியாவிளிருந்து புறப்பட்ட பல விமானங்கள் மஸ்கட் FIR-லிருந்து திரும்பின," என்று அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட சேவைகளில், இண்டிகோ தோஹா (அதிகாலை 3.40) மற்றும் துபாய் (காலை 6.20) விமானங்கள்; ஏர் அரேபியா ஷார்ஜா (அதிகாலை 3.45) மற்றும் அபுதாபி (அதிகாலை 4.50) விமானங்கள்; எடிஹாட் துபாய் (அதிகாலை 3.55); எமிரேட்ஸ் துபாய் (அதிகாலை 3.50); கத்தார் ஏர்வேஸ் தோஹா (அதிகாலை 4.05); கல்ஃப் ஏர் பஹ்ரைன் (அதிகாலை 5.35); ஓமன் ஏர் மஸ்கட் (காலை 7.20) ஆகியவையும் அடங்கும்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது. அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பெய்தது.

ஈரானின் தலைவர் கமேனி தங்கியிருக்கும் மாளிகை மீது இந்த தாக்குதல் நடந்தது. இதில் வான்வழித் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இதை உறுதி செய்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்து ஒரு வாரத்திற்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+