பெட்ரோல் பங்க்கில் யார் பாருங்க.. சென்னையில் றெக்கை கட்டி பறந்த "சைக்கிள் ஜோடி".. நம்பவே முடியலயே
சென்னை: சென்னை அண்ணாநகர் பகுதியில், கள்ளக்காதல் ஜோடி ஒன்று சிக்கியிருக்கிறது.. பைக்குக்கு பெட்ரோல் போட போனபோது, நடந்த சம்பவம் தொடர்பாக இவர்களை அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னை முகப்பேர் மெயின் ரோட்டில், திடீரென சைக்கிள்கள், டூவீலர்கள் காணாமல் போக ஆரம்பித்தன.. அதிலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புத்தம் புதிய சைக்கிளும் திருடு போயிருந்தது.

வாகன திருட்டு: இந்த வாகன திருட்டுகள், மெயின் ரோட்டிலேயே நடந்ததால், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அனைத்தும் பதிவாகியிருந்தன.. இந்த காட்சிகள் சோசியல் மீடியாவிலும் பரவ துவங்கி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
இதனிடையே, தங்கள் பகுதியில் சைக்கிள், பைக்குகளை காணாமல், அதன் உரிமையாளர்கள், ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார்களை துவங்கினர்.. இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும், தீவிரமாக கண்காணித்து வந்தனர். அத்துடன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் இதற்காகவே ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.. சிசிடிவி கேமராவில் ஏற்கனவே பதிவாகியிருந்த காணாமல் போயிருந்த பைக்குகளின் நம்பரை வைத்து, திருட்டு கும்பலை தேடி வந்தனர்.
பைக் நம்பர்: அதில், ஒரு பைக் நம்பரை வைத்து, அயப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டை கண்டுபிடித்தனர். பிறகு, அந்த வீட்டில் வசித்து வந்த ஒரு பெண்ணையும், ஒரு நபரையும் பிடித்து விசாரித்தனர்..
அந்த நபரின் பெயர் முகமது தீன் (36) என்பதும், இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருக்கிறதாம். இவரிடம் கேஷியராக வேலை பார்ப்பவர் ஸ்ரீதேவி.. 32 வயதாகிறது ஸ்ரீதேவி கணவரை இழந்த விதவையாவார்.. இதனால், முகமதுதீனுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளதும் விசாரணையில் அம்பலமானது.
கள்ளக்காதல்: இந்த கள்ளக்காதல் ஜோடி போலீசாரிடம் சொல்லும்போது, "3 நாட்களுக்கு முன்பு முகப்பேர் பகுதியில் வீடு வாடகைக்கு பார்த்துவிட்டு வந்தோம்.. அப்படி வரும்போது எங்களது பைக்கில் பெட்ரோல் இல்லை.. அதனால், அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புதிய சைக்கிளை திருடிக்கொண்டு, அதே பகுதியலிருந்த காயலான் கடையில் 1000 ரூபாய்க்கு விற்றுவிட்டோம். அந்த பணத்தில், பெட்ரோல் போட்டோம் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, இவர்கள் வேறு எங்கேயாவது கைவரிசை காட்டி உள்ளார்களா? அந்த பகுதியில் காணாமல் போனதாக சொல்லப்படும் பைக்குகள், சைக்கிள்கள் எங்கே? என்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.















Click it and Unblock the Notifications