Chennai bird: சென்னை பெரும்பாக்கத்தில்.. திடீரென தென்பட்ட உருவம்! திரண்டு பார்த்த மக்கள்.. இது அவசியம்தான்!
சென்னை: சென்னையில் உள்ள நீர் நிலைகளில் புதிய உயிர்கள் அதிக அளவு வளர தொடங்கியுள்ளன. குறிப்பாக பெரும்பாக்கத்தில் வெண்கல இறக்கை நீலத்தாழையை பார்த்து மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
நீர் கோழி, தாமரைக்கோழி உள்ளிட்டவை சென்னையில் பல இடங்களில் இருந்தாலும், இந்த நீலத்தாழை மக்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. குறிப்பாக பெரும்பாக்கம் பகுதியில் இந்த பறவைகள் அதிக அளவில் காணப்படுவதால், சென்னை இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்று உணர்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கூச்ச சுபாவம்
இது குறித்து உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகையில், "மனித நடமாட்டம் இல்லாத சதுப்பு நிலங்களில்தான் இந்த பறவைகள் காணப்படும். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட இந்த பறவைகள், மனித நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலும் தற்போது காணப்படுகிறது. நீர் தேங்கியிருக்கும் பகுதியில் நீர் தாமரை கொடி முளைக்கும். இது சாதாரண தாமரை கொடிகளை போல தெரிந்தாலும், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதன் இலைகள் தாமரை இலையை போல பெரியதாக இருக்கும். இதுவே இப்பறவைகள் வாழ்வதற்கு போதுமான இடம்தான்.
சென்னையில் ஆச்சரியம்
நீர்வாழ் தாவரங்கள் நிறைந்த சதுப்பு நிலம் இருந்தால், வெண்கல இறக்கை நீலத்தாழைக்கு அதுவே வீடாகும். இரண்டு சுவர்களுக்கு நடுவில் நீர் தாமரை முளைத்திருந்தாலும் கூட பரவாயில்லை, அதை தன் வீடாக கருதி இந்த பறவைகள் வசிக்க தொடங்கிவிடும். இந்தப்பறவை ஐரோப்பிய குள்ள அங்கோராவைப்போல் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டது. பயம் வரும்போது சட்டென மறைந்துவிடும். சென்னையில் இந்த பறவை பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பறவைகள் சென்னைக்கு அவசியம்" என்று கூறியுள்ளனர்.
வெண்கல இறக்கை நீலத்தாழைகள்
சென்னை பெருநகர் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இது தனது வாழ்விடத்தை அமைத்துக்கொண்டிருக்கிறது. நீர்வாழ் தாவரங்களின் அடிப்படையில் இது காட்டும் நெகிழ்வுத்தன்மை குறிப்பிடத்தக்கது. இதற்கு அடர்த்தியான நீர்வாழ் தாவரம் தேவை. இருப்பினும் எங்காவது கொஞ்சம் இடமிருந்தாலும் தயக்கப்படாமல், அங்கே குடிபெயர்ந்துவிடும். பெரும்பாக்கத்தில் உள்ள சாந்தி நகர்-கைலாஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு வெற்று நிலத்தில் வெண்கல இறக்கை நீலத்தாழைகள் இப்படித்தான் வாழ்கின்றன.
வித்தியாசமான பறவை
இந்த நிலத்தில் நீர் தாமரை அதிகம் இருக்கிறது. இது பெரிய அகன்ற இலைகளைக் கொண்ட நீர்த்தேக்கத்தைப் போல மறைந்திருக்க உதவாது, ஆனால் வெண்கல இறக்கை நீலத்தாழைக்கு இது மிகவும் வசதியானது. இந்த இடத்தில் வெண்கல இறக்கை நீலத்தாழைகள் வசதியாக உள்ளன. இந்த பறவையின் குணாதிசயம் மிகவும் வித்தியாசமானது. இந்த இனங்களில் பெண் பறவைகள்தான் ஆதிக்கம் செலுத்தும். கூடு கட்டுவது தொடங்கி, முட்டைகளை அடைகாப்பது வரை ஆண் பறவைகள்தான் செய்யும். பெண் பறவைகள், முட்டையிட்டவுடன் வேலை முடிந்தது என கிளம்பிவிடும். மற்றொரு இணையுடன் சேர்ந்து மீண்டும் முட்டையிடும். இப்படி பல ஆண் பறவைகளுடன் சேர்ந்து இருக்கும்.
சிலந்திகள், நத்தைகள் என முதுகெலும்பு இல்லாத பூச்சிகளை இந்த பறவைகள் உணவாக கொள்கின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளும் இந்த பறவையை பார்க்க முடியும். இதனால் பறக்க முடியும் என்றாலும், கோழியை போல எப்பொதாவதுதான் பறக்கும். மற்ற நேரங்களில் கரைக்கு பக்கத்தில் நடந்து சென்று இறையை வேட்டையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications