என்னப்பா ஹேர்கட் இது.. இப்படியா வெட்டுறது.. கண்டித்த அம்மா.. தூக்கில் தொங்கிய 17 வயது மகன்!
தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: "ஏம்பா.. இந்த வயசிலேயே இது தேவையா?.. இப்படியா முடி வெட்டுறது?" என்று பெற்ற தாய் மோகனா கேள்வி கேட்டதால், தூக்கில் தொங்கிவிட்டார் 17 வயது மகன்!
சென்னை வளசரவாக்கத்தை அடுத்துள்ள பகுதி கைகான் குப்பம்.. இங்கு வசித்து வருபவர்தான் மோகனா.. ஷூட்டிங் நடக்கும் இடங்களில் இவர் சமையல் பாத்திரங்களை கழுவும் வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகன் சீனிவாசன்.. 17 வயதாகிறது.. தான் கஷ்டப்பட்டாலும் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பது மோகனாவின் ஆசை.. அதனால், குன்றத்தூரில், ஒரு தனி ஹாஸ்டலில் மகனை தங்க வைத்து, அங்குள்ள அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார்.

தலைமுடி
இந்நிலையில் பொங்கல் லீவுக்கு வீட்டுக்கு வந்திருந்தார் சீனிவாசன்.. 2 நாளைக்கு முன்பு முடிவெட்டுவதற்காக சீனிவாசன் சலூன் கடைக்கு சென்றிருக்கிறார்.. ஆனால் தலைமுடியை முழுவதுமாக வெட்டாமல், ஸ்டைலாக வெட்டி கொண்டு வந்து நின்றிருக்கிறார்.

மனவருத்தம்
இதை பார்த்ததும் மோகனா, "இப்படியா முடி வெட்டுவது? படிக்கிற வயசில் ஏன் இப்படி வெட்டினாய்?" என்று கண்டித்துள்ளார்.. இதற்கே மனசு உடைந்து போய்விட்டார் சீனிவாசன். இதனால் சரியாக பேசாமலேயே இருந்துள்ளார்.. ஏதோ கோபமாக இருக்கிறார் என்றுதான் மோகனா அப்போது நினைத்தார்.

கதறி அழுதார்
நேற்று முன்தினம் வழக்கம்போல் மோகனா வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சீனிவாசன் மட்டும் தனியாக இருந்தார். வேலை முடிந்து சாயங்காலம் மோகனா வீட்டுக்கு வந்து பார்த்தால், சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறினார்.. மகனை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார்.

அதிர்ச்சி - சோகம்
தகவலறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பிறகு நடத்திய விசாரணையில், முடி வெட்டியதற்காக அம்மா திட்டியதால், மனம் உடைந்து சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றாலும், மோகனாவை இன்னும் யாராலும் சமாதானப்படுத்தவே முடியவில்லை.












Click it and Unblock the Notifications