சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எலான் மஸ்க் போட்ட லைக்.. வெறும் 16 மணி நேரத்தில் சென்னை நிறுவனத்திற்கு ரூ 7 கோடி முதலீடு.. அசத்தல்!

Google Oneindia Tamil News

சென்னை: டிரோன் தயாரிப்பு நிறுவனத்தின் ட்வீட்டிற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் போட்ட லைக்கால் சென்னை நிறுவனத்துக்கு கிடைத்த ரூ. 7 கோடி முதலீடு கிடைத்துள்ளது.

கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ட்ரோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே டிரோன் தயாரிக்க வேண்டும் என்பதே இதன் இலக்கு.

பிளஸ் 2 துணைத்தேர்வு.. ஆகஸ்டு 6 முதல் 19 வரை நடைபெறும்.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு அரசுபிளஸ் 2 துணைத்தேர்வு.. ஆகஸ்டு 6 முதல் 19 வரை நடைபெறும்.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு அரசு

இந்த இலக்குடன் கடந்த 2015 ஆம் ஆண்டு கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற நிறுவனம் ஜெயபிரகாஷ் என்பவரால் தொடங்கப்பட்டது.

கருடா ஸ்பேஸ்

கருடா ஸ்பேஸ்

ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் கருடா ஏர்ஸ்பேஸ் குழுவினர் கூறுகையில் சிங்கப்பூரில் உள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி மையத்தில் உள்ள 1.22 லட்சம் சோலார் பேனல்களை பராமரிக்க தங்களது ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

இவர்கள் தயாரிக்கும் டிரோன்கள் மற்ற நிறுவனங்களின் டிரோன்களை விட குறைந்த அளவு தண்ணீரை பராமரிப்புக்கு பயன்படுத்துகிறது. இதுகுறித்த வீடியோவை அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் வீடியோவாக எடுத்து அதை எலான் மஸ்க், நடிகர் மாதவன், அமெரிக்க தூதர் உள்ளிட்டோருக்கு டேக் செய்திருந்தார்.

மிதவை சோலார்

மிதவை சோலார்

அந்த வீடியோவில் சிங்கப்பூரில் தொடங்கியுள்ள மிதவை சோலார் அமைப்பானது 45 புட்பால் கிரண்ட்களின் அளவை கொண்டது. இதில் 1.22 லட்சம் சோலார் பேனல்கள் உள்ளன. இதன் திறன் 60 மெகா வாட்கள் ஆகும். சோலார் அமைப்பானது ஒரு அணையில் மிதந்து கொண்டிருக்கிறது. இது ஒரு டிரோன் மூலம் பராமரிக்கப்படுகிறது.

Recommended Video

    Elon Musk Reply To Madan Gowri | Tesla Car In India | MG Squad | Oneindia Tamil
    கார்பன் டை ஆக்ஸைடு வாயு

    கார்பன் டை ஆக்ஸைடு வாயு

    இதன் மூலம் சிங்கப்பூரில் ஆண்டுக்கு 32 கிலோ டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியேறுவதை குறைக்க முடியும். வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் 4 மடங்கு சோலார் பயன்பாட்டை அதிகரிப்பதே இலக்கு ஆகும். மேலும் 4 மிதவை சோலார் அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மிதவை

    மிதவை

    மாடி கூரையில் வைக்கப்படும் சோலார் அமைப்புகளை விட மிதவை சோலார் அமைப்புகள் 5 முதல் 15 சதவீதம் வரை சிறப்பு வாய்ந்தவையாகும் என்பன உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டிற்கு உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்கா காரின் சிஇஓவுமான எலாக் மஸ்க் லைக் போட்டுள்ளார்.

    7 கோடி ரூபாய்

    7 கோடி ரூபாய்

    இதனால் இந்த ட்வீட் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கவனம் ஈர்த்த லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலரை கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் ஆகும்.

    English summary
    Chennai Garuda Aerospace gets Rs 7 crore investment from a london based company after Elon musk puts likes for their tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X