அரசு ஊழியர்கள் போன்று.. ஊழியர்களுக்கு சம்பளம் குறித்து சென்னை மாநகராட்சி குட்நியூஸ்
சென்னை: தற்காலிக பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கிட வேண்டும் என்று கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று முக அங்கீகார வருகை பதிவேடு முறையை சென்னை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது. இந்த வருகை பதிவுகள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் நிர்வாக அலுவலரால் உறுதி செய்யப்பட உள்ளது. இதேபோல் புதிய நடைமுறையின்படி மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1.50 கோடி பேர் வசிக்கிறார்கள். மிகவும் குறைந்த சதுரமீட்டர் பரப்பில் மட்டுமே பல லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகிறார்கள். மாநகராட்சி ஊழியர்கள் தான் தூய்மை பணி, குடிநீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை பணி உள்பட அன்றாடம் செய்யும் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நிரந்தர பணியாளர்களை தாண்டி, சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்கள் மற்றும் வெளிமுகமை மூலமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், மாநகராட்சியின் கீழ் உள்ள அம்மா உணவகம், சாலை துப்புரவு பணி, தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை பிடிக்கும் பணி, பள்ளிகளில் தூய்மை பணி, பூங்காக்கள் பராமரிப்பு, மயானபூமி, பொது கழிப்பிடங்கள் போன்ற இடங்களில் தினமும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி தற்காலிக பணியாளர்களுக்கு மாதம்தோறும் உரிய தேதியில் ஊதியம் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளை கடந்த கால மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பினார்கள். இந்த பிரச்சினையை சரி செய்ய கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள், இந்த பிரச்சனைக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.
இந்த நிலையில், தற்காலிக பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கிடும் வகையில் முக அங்கீகார வருகை பதிவேடு முறையை சென்னை மாநகராட்சி அமல்படுத்தி இருக்கிறது. இதற்கான மென்பொருளை சென்னை மாநகராட்சியின் தகவல் தொழில்நுட்ப மையமே உருவாக்கி உள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தியே இனி முக அங்கீகார வருகை பதிவேடு எடுக்கப்பட தீர்மானிக்கப்பட இருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் வருகை, வங்கி கணக்கு விவரம், ஆதார் எண், பணிபுரியும் இடம் ஆகியவை இந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய நடைமுறையின்படி மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் காரணமாக சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் இனி கிடைக்கும். முன்பு சம்பளம் வழங்க பணியாளர்கள் கையெழுத்திடும் வருகை பதிவேடு முறை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய நடைமுறையால் மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என கூறிய அதிகாரிகள், அதற்கு வருகை பதிவினை முக அங்கீகார முறையிலான வருகை பதிவாக பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் அமலாகியுள்ளது என்றும் கூறினார்கள்.
இதேபோல, தற்காலிக பணியாளர்களின் வருகை பதிவு முந்தைய மாதத்தின் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கணக்கிடப்படும் என்றும், இந்த வருகை பதிவை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்வார்கள் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இந்த வருகை பதிவேடு மூலம் அரசு ஊழியர்கள் போன்று ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் ஊதியம் பணியாளர்களுக்கு இனி கிடைக்க போகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications