சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு வந்த "ஆப்பு".. கொத்து கொத்தா மாட்ட போறாங்க.. சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: சென்னை மாநகராட்சி, வாகன ஓட்டிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்து தந்து வருகிறது.. அத்துடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சில அதிரடி உத்தரவுகளையும் அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.
வழக்கமாக சென்னை போன்ற மாநகரங்களில் டிராபிக் பிரச்சனையைபோலவே, பார்க்கிங் பிரச்சனையும் தீராமல் உள்ளது.. இந்த பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காகத்தான், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் சமீபத்தில் அமைக்கப்பட்டன.

தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக்நகர், பெசன்ட்நகர், புரசைவாக்கம், உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இவை கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது.
பயன்பாடு கட்டிடம்: இப்போதைக்கு, பார்க்கிங் கட்டணம் மூலம் தினமும் ரூ.1.5 லட்சம் வரை வாடகை கட்டணம் மாநகராட்சிக்கு கிடைத்து வரும் நிலையில், பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் மற்றும் மேம்படுத்த வேண்டிய வணிக வளாகம் என கூடுதலாக 10 இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள் குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. இதில் கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டல அலுவலகங்கள், சி.பி.ராமசாமி சாலை வளாகம், தி.நகரில் உள்ள நாயர் சாலை வளாகம் உள்ளிட்டவையும் அடக்கம்.
அதிரடி: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு உத்தரவை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.. அதாவது, சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால், அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராதாகிருஷ்ணன் வார்னிங் தந்துள்ளார்.
காரணம் என்ன: சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறைய இடங்களில் நிறுத்தப்படுவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சொல்கிறார்கள்.. மேலும், பார்க்கிங் வசதி ஏற்டுத்தியும்கூட, பல இடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு பலர் வெளியூர்களுக்கு சென்றுவிடுகிறார்கள்.. இதனால் அந்த வாகனங்கள் அங்கேயே நிற்க வேண்டியதாகிவிடுகிறது. மேலும் தேவையில்லாத பதட்டமும், குழப்பமும் ஏற்படுதால், மாநகராட்சி இப்படி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications