Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹே எப்புட்ரா! 40 வயது மரத்தை பாதுகாக்க இப்படியா? அசர வைத்த சென்னை மாநகராட்சி! குவியும் பாராட்டு! செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 40 வயது நிரம்பிய ராட்சத அத்தி மரம் அருகே உள்ள வீடுகள் மீது சரிந்து விழும் நிலையில் இருந்தது. இதனை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கூறிய நிலையில் அந்த மரத்தை காப்பாற்ற மாநகராட்சி அதிகாரிகள் போட்ட ‛எஃபெக்ட்' தான் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அப்படி என்ன செய்தார்கள்? வாங்க பார்ப்போம்.

நாளுக்கு நாள் உலகம் முழுவதும் பூமி வெப்பமயமாதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஒசோன் படலத்தின் மீதான ஓட்டையும் பூமிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்து பூமி வெப்பமயமாதலை தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவை பொறுத்தமட்டில் மர வளர்ப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் சாலை உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மரங்கள் வெட்டுவதை முடிந்த அளவுக்கு அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். அதோடு பல இடங்களில் மரங்களை வெட்டி வீசி விடாமல் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் வளர்ப்பதும் நடந்து வருகிறது.

Chennai corporation officials shift 40 year old tree from adyar to Kottur miyawaki forest

அந்த வகையில் தான் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. அதாவது சென்னை அடையாறு காந்தி நகர் 4வது மெயின் ரோட்டில் பழமையான அத்திமரம் ஒன்று இருந்தது. 40 ஆண்டுகள் கடந்ததால் இது ராட்சத மரமாக வளர்ந்து இருந்தது. இந்த மரத்தின் அருகே குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதற்கிடையே தான் மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் என்ற வகையில் சரிந்து காணப்பட்டது.

இதனால் பயந்துபோன மக்கள் உடனடியாக இந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த மரத்தை வெட்டி வீழ்த்தி விடாமல் வேராடு பிடுங்கி மாற்று இடத்தில் நட முடிவு செய்தனர். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றனர். அதன்பிறகு கிரேன் வாகனத்தின் உதவியுடன் அந்த மரம் வேரோடு பிடுங்கப்பட்டது.

இதையடுத்து அந்த மரம் அடையாறில் இருந்து கோட்டூரில் உள்ள மியாவாக்கி காட்டுக்கு கொண்டு சென்று நடப்பட்டது. இந்த மரத்தை கண்காணிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டு குவிந்து வருகிறது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறப்பட்டதாவது:

‛‛அடையாறில் இந்த மரம் குடியிருப்பு அருகே இருந்ததால் வீட்டின் மீது விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். எனவே மரத்தை அகற்ற, குடியிருப்போர் நல சங்கத்தினர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இதானல் மரத்தை வேரோடு பிடுங்கி கோட்டூரில் வைத்துள்ளோம். மரத்தின் வேர்களின் மையப் பகுதி சேதமடையாமல் பெரிய குழி தோண்டி கிரேனின் உதவியுடன் முழுவதும் எடுக்கப்பட்டது. இந்த பணியில் 20 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்'' என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+