குளுகுளுவென மாறப்போகும் தலைநகர்.. அடையாறு கரையோரம் சென்னை மாநகராட்சி போட்டுள்ள சூப்பர் திட்டம்..!
சென்னை: தலைநகர் சென்னையில் அடையாற்றின் கரையோரம் ரூ.10.60 கோடியில் பசுமை போர்வையை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
Recommended Video
சென்னையில் ஓடும் மூன்று ஆறுகள் - கூவம், அடையாறு நதி, கொசஸ்தலை ஆகியவற்றின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிந்த கதை தான்.
குறிப்பாக கூவம் மற்றும் அடையாற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த ஆறுகளை மீட்டு மீண்டும் பழையபடி மாற்ற அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி
இதில் சென்னை நகரின் மையத்தில் பாய்ந்து, சுமார் 20 கிமீ நீளத்திற்குப் பயணிக்கும் அடையாறு வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அடையாற்றைப் பாதுகாத்துச் சீரமைக்கும் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வெள்ளம் ஏற்படும் சமயத்தில் அதைச் சமாளிக்கும் வகையில் ஆற்றைத் தூர் வாரி ஆழப்படுத்தும் பணிகளிலும் கரைகளை வலுப்படுத்தும் பணிகளிலும் பொதுப்பணித் துறை ஈடுபட்டுள்ளது.

உரிய நடவடிக்கை
அதேபோல ஆற்றில் கழிவுநீர் கலைப்பதையும் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலங்களை அழகுபடுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தவிர ஆற்றின் கரையோரம் பொது கழிவறைகள், 5 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

பசுமை போர்வை
மேலும், ஆற்றின் கரையோரம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் பணிகளையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பசுமை போர்வை பரப்பு 33 சதவீதமாக அதிகரிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் பின்னரே இந்த மரக்கன்றுகளை நடும் பணிகள் வேகமெடுத்துள்ளது

மரங்கள் நடும் பணி
அடையாற்று நதி பாயும் சைதாப்பேட்டை - கோட்டூர்புரம் இடைப்பட்ட தூரத்தில் உள்ள 2 கிலோமீட்டரில் ஆற்றின் இரு கரைகளிலும் சுமார் ரூ 10.6 கோடி செலவில் மரக்கன்றுகளை நடவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வெறும் அழகிற்காக நடப்படும் வெளிநாட்டு மரங்களை நடாமல், உள்நாட்டு வகை மரங்களை நட்டு பசுமை போர்வையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,












Click it and Unblock the Notifications