கேட்கவே கஷ்டமா இருக்கே.. சென்னையில் இப்படியொரு பெண்ணா? சிறுசேரியில் தோழியின் அப்பார்ட்மென்ட்டில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த வாரம் திருமணம் உள்ள நிலையில், தன்னுடைய தோழி வீட்டுக்கு வந்துள்ளார் இளம்பெண் நிவேதா.. அப்போது வீட்டில் தோழி இல்லையாம்.. இதையடுத்து, அவர் எடுத்த முடிவானது, சென்னையை அதிர வைத்து வருகிறது.. என்ன நடந்தது?

சென்னை அம்பத்தூர் புதூர் பானு நகர் 3வது பிரதான சாலையில் அமைந்துள்ளது அந்த அடுக்குமாடி குடியிருப்பு... இங்கு நேற்று 4வது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அம்பத்துார் போலீசுக்கு தகவல் தந்தனர்..

chennai siruseri apartment

இதையடுத்து போலீசாரும் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை துவங்கினர்.

தாய்மாமன்:
உயிரிழந்த பெண் நிவேதா, 27 வயதான அவர், ஐடி ஊழியர் என்பதும் தெரியவந்தது.. அம்பத்துார், ஒரகடம், வளர்மதி நகரை சேர்ந்தவராம்.. சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.. நிவேதாவுக்கு தாய், தகப்பன் கிடையாது. எனவே, தாய்மாமன் வீட்டில்தான் வசிந்து வந்துள்ளார்.

இவருக்கு, கடந்த வருடம் செப்டம்பர் மாதம், தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் வீட்டில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.. வரும் 19ம் தேதி திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டிருந்தது.. குடும்பத்தினர் அனைவரும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

தோழி ஸ்வேதா: இந்நிலையில், பானு நகரில் உள்ள தன்னுடைய தோழி ஸ்வேதா வீட்டிற்கு, நேற்று சென்றிருக்கிறார் நிவேதா.. ஆனால், அப்போது ஸ்வேதா வீட்டில் இல்லை என தெரிகிறது. அந்த நேரத்தில் அப்பார்ட்மென்ட்டின் 4வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து நிவேதா தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்ல, நிவேதாவுக்கு கடந்த சில நாட்களாகவே வேலைக்கு போக பிடிக்கவில்லையாம்.. இதை வீட்டில் அனைவரிடமும் சொல்லி வந்தாராம்.. ஒருகட்டத்தில் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளாராம்.. இதனால், அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

பரிதாபம்: கடந்த 2000ல் நிவேதாவின் அப்பா பாலாஜி விபத்தில் இறந்துவிட்டார்.. இவரது அம்மாவும் கடந்த 2020ல் கொரோனாவால் இறந்துவிட்டாராம்.. நிவேதாவும், அவரது தம்பி 25 வயதான சந்திரபாபுவும், ஒரகடத்தில் உள்ள அவர்களின் தாய் மாமா வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர்.. அக்கா, தம்பி 2 பேருமே ஐடி கம்பெனியில்தான் வேலை பார்க்கிறார்கள்.. நிவேதாவின் தம்பி சந்திரபாபுதான், தன்னுடைய அக்கா தற்கொலை குறித்து அம்பத்தூர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

நிவேதாவுக்கு சமைக்க தெரியாதாம்.. கல்யாணம் முடிந்து, கணவர் வீட்டில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய தெரியாதே என்று அனைவரிடமும் கடந்த சில நாட்களாகவே புலம்பி கொண்டிருந்தாராம் நிவேதா.. இதுவே அவரது அதிக மன அழுத்தத்திற்கு காரணமாக இருந்துள்ளது. இதற்காகவே, மனநல மருத்துவரிடமும் சிகிச்சை பெற்றுள்ளார் நிவேதா.

கொடுமை: இந்த திருமணத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்திரபாபு குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதும், அதுவும் சமைக்க தெரியாது என்பதற்காக மன அழுத்தத்திற்கு உள்ளாகி உயிரை மாய்த்து கொண்டதும், மிகப்பெரிய பரபரப்பை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+