சென்னையில் களமிறக்கப்பட்ட "ஸ்மார்ட் கம்பங்கள்".. அருகில் நின்றாலே இலவச வைஃபை.. எப்படி பயன்படுத்துவது
சென்னை: சென்னை மாநகரில் ஸ்மார்ட் கம்பங்களின் மூலம் Wi-Fi வசதியை (smart city wifi) பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்து வரும் நாட்களில் மற்ற பெரு நகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் மு. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் பல்வேறு புனரமைப்பு பணிகள், வளர்ச்சி பணிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பட்ஜெட்டில் கூட சிங்கார சென்னை 2.0 தொடர்பான திட்டங்கள் இடம்பெற்று இருந்தது. முக்கியமான சென்னையின் பல்வேறு பகுதிகளை ஹைடெக்காக மாற்றும் முனைப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சுவரொட்டிகளை தடை செய்வது, கடற்கரைகளை அழகாக்குவது, புதிய பூங்கா அமைப்பது, சுற்றுலாத்தளங்களை உருவாக்குவது என்று தமிழ்நாடு அரசு சென்னைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது சென்னையில் இலவச வைஃபை வழங்கும் ஸ்மார்ட் கம்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எப்படி
சென்னையில் மக்களுக்கு இலவசமாக வைஃபை வழங்கும் விதமாக 49 இடங்களில் இந்த கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வைஃபை வசதியை எப்படி பயன்படுத்துவது, இது எப்படி செயல்படும் என்று சென்னை மாநகராட்சி விளக்கி உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திட்டப்பணிகள்
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதன் முக்கிய நோக்கம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப் பணிகளை ஒருங்கிணைத்து நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதே ஆகும்.மாநகரின் முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல் அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், அவசரகாலத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல், திடக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதன் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் ரிப்பன் கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

ஸ்மார்ட் கம்பம்
இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள wi-fi தொடர்பை (smart
city wifi) பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச wi-fi பெறுவதற்கு கைப்பேசி எண்ணை பதிவு செய்து OTP மூலம் இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
தெரிந்து கொள்ளலாம்
மேலும் பொதுமக்கள் இலவச wi-fi இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf இணையதள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த லிங்கில் சென்று சென்னையில் எங்கெங்கே ஸ்மார்ட் கம்பங்கள் இருக்கிறது என்று பார்த்து, உங்களுக்கு அருகில் அந்த கம்பம் இருந்தால் அதன் மூலம் இலவச wi-fi வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications