சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் அதிகாலை முதல் மழை.. குளிரால் "உறைந்த" தலைநகரம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Recommended Video

    சென்னை: விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை.. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்..!

    வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Chennai gets moderate rainfall and fog

    தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் 8ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளது.

    Chennai gets moderate rainfall and fog

    நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Chennai gets moderate rainfall and fog

    இந்த நிலையில் சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, கிண்டி, மந்தைவெளி, மேற்கு மாம்பலம், அசோக்நகர், மயிலாப்பூர், முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    பிரிட்டனில் ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 58 ஆயிரம் பேர் பிரிட்டனில் ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 58 ஆயிரம் பேர்

    பனி மூட்டமான மார்கழி மாதத்தில் குளிர் நிலவி வரும் நிலையில் இந்த மழையால் மேலும் பூமியானது குளிர்ந்து காணப்படுகிறது. கிழக்கு திசை காற்று பலமாக உள்ளதால் ஜனவரி 10-ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை முடிவடைகிறது.

    Chennai gets moderate rainfall and fog

    12ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காலை முதல் 2 மணி நேரமாக மழை நீடித்து வருகிறது.

    Chennai gets moderate rainfall and fog

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரமணி, பெங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    English summary
    Chennai and its surroundings gets moderate rainfall because of upper air circulation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X