ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் வெடிகுண்டு மாற்றிய வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் வைத்து மாற்றியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனின் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலைக்கு பயன்படுத்துவதாக இருந்த வெடி குண்டுகளை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் (அம்பேத்கர் சிலை அருகே) வைத்து மற்ற குற்றவாளிகளுக்கு மாற்றி கொடுத்ததாக காவல்துறையால் 17வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஹரிஹரன் 112 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கோரி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை காவல்துறை தாக்கல் செய்தது.
அதனால், நிலுவையில் விசாரணை இருந்த போது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ஹரிஹரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications