Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோர்ட் சொன்னதை செய்யலையே.. அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கு! தமிழக அரசை விளாசிய நீதிபதிகள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததோடு அரசு தனது கடமையை செய்ய தவறியது எனவும், உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறை முன்வைத்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

TN Govt HC gr Swaminathan

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா

அதற்கு மேலாக, 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பாஜகவினர், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு உருவானது. இந்த சூழ்நிலையில், தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணையில், தமிழக அரசு பல்வேறு முக்கிய வாதங்களை முன்வைத்தது.

ஜிஆர் சுவாமிநாதன்

குறிப்பாக, "தனிநீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், விதிகளுக்கு விரோதமாக நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துள்ளார். அவரது உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை வரம்பை மீறிய செயல்பாடாக இது கருதப்படுகிறது; எனவே அவர் அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்" என்று அரசுத் தரப்பு வாதிட்டது.

விதிமீறல்

மேலும், "விளக்கம் அளிக்க மனுதாரருக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் அவமதிப்பு வழக்கை உடனடியாக எடுத்துள்ளார். வழக்கை எடுத்த அதே நாளில் தண்டனை வழங்க இயலாது. உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதா என அல்லது விளக்கம் கேட்பது தான் நடைமுறை; இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது" எனவும் தெரிவித்தது.

இந்து சமய அறநிலையத் துறை

அதேபோல், இந்து சமய அறநிலையத் துறை தரப்பு, "தீபத்தூண் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதை நீதிபதியும் மனுதாரரும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும்போது உடனடியாக தீபம் ஏற்ற உத்தரவு எப்படி அமல்படுத்தப்படும்?" என வாதம் முன்வைத்தது.

அரசின் மனு தள்ளுபடி

இதற்கு பதிலளிக்கும் வகையில், மனுதாரர் தரப்பு, "நீதிபதி உத்தரவை அறநிலையத்துறை அமல்படுத்தவில்லை" என குற்றம் சாட்டியது. இதை அடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் உத்தரவை மாலைக்கு ஒத்திவைத்தனர். இந்த நிலையில் மாலை சுமார் 4 மணியளவில் இந்த வழக்கின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் காவல்துறை பாதுகாப்பை வழங்க தவறியதால் தான் மத்திய பாதுகாப்பு படை செல்ல நேரிட்டதாகவும், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவில் விதிமீறல் இருப்பதாக தெரியவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டது எனக் கூறிய நீதிபதிகள் அரசு உள்நோக்கத்தோடு இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனுவை தள்ளுபடி செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+