போதை பொருள் கடத்தலில் திமுகவை தொடர்புபடுத்திய வழக்கு! எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க கோர்ட் உத்தரவு
சென்னை: போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் சமீபத்திய போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான திமுக-வை தொடர்புபடுத்தி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பினால் விமர்சனங்களையும் திமுகவை தொடர்பு படுத்தி எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டும் வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடன் பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ் பாரதி தரப்பில் வழக்கறிஞர் மனுராஜ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதம் வைத்தனர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க உத்தரவிட்டு டிசம்பர் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications