பினாமி சட்டத்தின் கீழ் வந்த ஐ.டி நோட்டீஸை எதிர்த்து ஐஏஎஸ் அதிகாரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனரான ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜனின் மனைவி சபிதாராணிக்கு எதிராக சோதனை உத்தரவு பெற்ற வருமான வரித்துறையினர், கடந்த 2016 பல்லாவரம் வீட்டில் சோதனை நடத்தி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கமும், சில நகைகளையும் கண்டுபிடித்தனர்.

Chennai HC rejects Tamilnadu Warehousing Corporation MDs plea under Benami law

இதுசம்பந்தமாக வருமான வரித்துறையினர் மதிப்பீடு செய்த நிலையில், பறிமுதல் செய்த நகை, பணத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி நாகராஜன் தான் பயனாளி எனக் கூறி பினாமி தடைச் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து நாகராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம், பினாமி தடைச் சடத்தின் கீழ் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு மூன்று வாரங்களில் விளக்கமளிக்க நாகராஜனுக்கு உத்தரவிட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+