சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking Live: தீர்ப்பால் ஏமாற்றம்.. குற்றாலத்திலிருந்து கிளம்பினர் தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று அவர் அதிரடி தீர்ப்பை வெளியிட்டார்.

    இரு நீதிபதிகள் அமர்வு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியதால் 3வது நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது நினைவிருக்கலாம்.

    Chennai High court 3rd judge to deliver his verdict on 18 disqualified MLAs- Live updates

    தினகரன் ஆதரவு தகுதி எம்எல்ஏக்கள் ஏற்கனவே குற்றாலத்திலுள்ள ஹை வியூ ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தால் அரசு தரப்பிலிருந்து இழுக்க முயற்சி நடைபெறும் என்பதால் இந்த ஏற்பாடு நடைபெற்றது.

    ஆனால் தீர்ப்பு சபாநாயகர் தரப்புக்கு ஆதரவாக வந்ததால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிம்மதி பெருமூச்சுவிடுகிறது. இனிப்புகளுடன் மாநிலமெங்கும் கொண்டாடி வருகிறார்கள் அதிமுகவினர்.

    Newest First Oldest First
    3:22 PM, 25 Oct

    தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி குற்றாலத்தில் பேட்டி

    எங்கள் முடிவை தினகரனிடம் தெரிவிப்போம் - செந்தில் பாலாஜி

    தீர்ப்பு காரணமாக வருத்தம் இல்லை - செந்தில் பாலாஜி

    சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது - செந்தில் பாலாஜி

    3:18 PM, 25 Oct

    டிடிவி ஆதரவாளர்கள் குற்றாலத்தை விட்டு புறப்பட்டனர்

    குற்றாலத்திலிருந்து மதுரை செல்வதாக தகவல்

    12:21 PM, 25 Oct

    இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை கோர்ட் நீக்கியுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி

    நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் - எடப்பாடி பழனிச்சாமி

    ஜெயலலிதா இருந்த காலத்தில் வென்றது போல வெல்வோம் - எடப்பாடி பழனிச்சாமி

    தினகரன் கூறும் அனுபவம் என்ன என்பது தெரியவில்லை - எடப்பாடி பழனிச்சாமி

    அதிமுகவிலிருந்து அம்மாவால் நீக்கப்பட்டவர் தினகரன் - எடப்பாடி பழனிச்சாமி

    அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாமல் இருந்தவர் தினகரன் - எடப்பாடி பழனிச்சாமி

    12:16 PM, 25 Oct

    எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியால் நல்ல தீர்ப்பு- எடப்பாடி பழனிச்சாமி

    20 தொகுதிகளிலும் அதிமுக தேர்தலை சந்திக்கும்- எடப்பாடி பழனிச்சாமி

    12:15 PM, 25 Oct

    காலியானதாக அறிவிக்கப்பட்டவுடன் அதிமுக தேர்தலை சந்திக்கும் - எடப்பாடி பழனிச்சாமி
    12:15 PM, 25 Oct

    நல்ல தீர்ப்பு வந்துள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    இடைத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் - எடப்பாடி பழனிச்சாமி

    11:47 AM, 25 Oct

    மக்கள் திமுகவுக்கு ஆதரவு தர காத்துள்ளனர் - ஸ்டாலின்

    இடைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - ஸ்டாலின்

    எதைப் பற்றியும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை, கவலைப்படவில்லை- ஸ்டாலின்

    எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயார் - ஸ்டாலின்

    மக்களவைத் தேர்தல் குறித்து திமுக மா.செக்கல் கூட்டத்தி்ல் ஆலோசித்தோம் - ஸ்டாலின்

    11:46 AM, 25 Oct

    18 தொகுதிகளும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் உள்ளன - ஸ்டாலின்

    மொத்தமாக 20 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டும் - ஸ்டாலின்

    உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என திமுக கோரிக்கை வைக்கிறது - ஸ்டாலின்

    11:45 AM, 25 Oct

    ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து திமுக கவலைப்பட வேண்டியதில்லை - ஸ்டாலின்

    11:08 AM, 25 Oct

    தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஒரு தெளிவு கிடைத்துள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்

    மேல்முறையீடு செய்தால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே - தமிழிசை

    ஹைகோர்ட் தீர்ப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

    10:56 AM, 25 Oct

    அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

    அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து ஆலோசனை

    சட்ட அமைச்சர் சி.வி.சண்முகும் ஆலோசனையில் பங்கேற்பு

    10:50 AM, 25 Oct

    18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்- ஹைகோர்ட்
    10:49 AM, 25 Oct

    துரோகிகளுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது- அமைச்சர் சி.வி.சண்முகம்

    18 நீதிபதிகள் வழக்கு குறித்து சி.வி.சண்முகம் கருத்து

    10:49 AM, 25 Oct

    எப்போது இடைத் தேர்தல் வந்தாலும் நாங்களே ஜெயிப்போம் - தினகரன்

    தீர்ப்புக்காக நீதிமன்றத்தை சாடுவது சரியல்ல - தினகரன்

    இதை நாங்கள் பின்னடைவாகவே கருதவில்லை, இது ஒரு அனுபவம் - தினகரன்

    தீர்ப்பு எங்களது ஒற்றுமையை இன்னும் அதிகரிக்கும் - தினகரன்

    10:47 AM, 25 Oct

    மேல் முறையீட்டை 18 பேரும் விரும்பினால் அதை செய்வோம் - தினகரன்

    தேர்தலை சந்திக்க விரும்பினால் தேர்தலை சந்திப்போம் - தினகரன்

    10:46 AM, 25 Oct

    துரோகி யார் என்று மக்களுக்குத் தெரியும் - தினகரன்

    தாங்கள் செய்வது பச்சைத் துரோகம் என்பதை ஆளுங்கட்சி உணர வேண்டும் - தினகரன்

    நீதிமன்றத் தீர்ப்பை வைத்து துரோகி யார் என்று முடிவு செய்ய முடியாது - தினகரன்

    10:46 AM, 25 Oct

    சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றுதான் ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது - தினகரன்

    இடைத் தேர்தலை தமிழக மக்களும், அமமுகவும் எதிர்பார்த்துக் காத்துள்ளோம் - தினகரன்

    இடைத் தேர்தலில் எங்களை நாங்கள் நிரூபிப்போம் - தினகரன்

    10:43 AM, 25 Oct

    அரசியலில் பின்னடைவு என்று எதுவும் இல்லை- டிடிவி தினகரன்

    அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடனும் கலந்து பேசுவேன்

    10:42 AM, 25 Oct

    ஒவ்வொரு நீதிபதியும் ஒரு தீர்ப்பு சொல்கிறார்கள் - தங்க தமிழ்ச்செல்வன்
    10:42 AM, 25 Oct

    ஹைகோர்ட் தீர்ப்பு பின்னடைவு அல்ல - தினகரன்

    உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி டிடிவி தினகரன் பேட்டி

    10:42 AM, 25 Oct

    தீர்ப்பின் விவரம் தெரிந்ததும் கருத்து சொல்வோம் - தங்க தமிழ்ச்செல்வன்

    18 எம்எல்ஏக்களும் எந்தத் தவறும் செய்யவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்

    கொறடா உத்தரவை நாங்கள் மீறவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்

    ஆளுநரை பார்த்தது மட்டுமே எங்கள் மீதான குற்றச்சாட்டு - தங்க தமிழ்ச்செல்வன்

    நீதிபதியின் தீர்ப்பை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்

    10:34 AM, 25 Oct

    18 எம்எல்ஏக்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது
    10:33 AM, 25 Oct

    18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்- ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
    10:31 AM, 25 Oct

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது
    10:27 AM, 25 Oct

    சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிப்பு

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பாதுகாப்பு

    10:17 AM, 25 Oct

    அரசு பல்நோக்கு மருத்துவமனை நிகழ்ச்சியை ரத்து செய்தார் முதல்வர் பழனிசாமி

    தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக தகவல்

    அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக நிகழ்ச்சி ரத்து

    10:15 AM, 25 Oct

    சென்னை உயர் நீதிமன்றம் வந்தார் நீதிபதி சத்தியநாராயணன்

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறார்

    10:15 AM, 25 Oct

    நீதிபதி சத்தியநாராயணனின் நீதிமன்ற அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிப்பு

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளிக்கும் நிலையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிப்பு

    நீதிபதி சத்தியநாராயணனின் பாதுகாப்புக்காக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்

    9:45 AM, 25 Oct

    அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வர அதிமுக தலைமை கழகம் திடீர் உத்தரவு

    இன்று காலை தீர்ப்புகள் வெளியாகும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு

    9:32 AM, 25 Oct

    அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஆலோசனை

    READ MORE

    English summary
    Chennai High court 3rd judge to deliver his verdict on 18 disqualified MLAs who are staying in Courtallam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X