ஆதீன மடங்களின் சொத்துகள்.. 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாத காலத்துக்குள் அகற்ற வேண்டும் என அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலரான ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ளன. இந்த சொத்துகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், அவற்றை மீட்க அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த ஆதீன மடம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களுக்கும் சொந்தமான சொத்துகளின் தற்போதைய நிலை குறித்த அறிய இந்த வழக்கில் அனைத்து ஆதீன மடங்களையும், அதன் மடாதிபதிகளையும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆதீன மடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்துக்குள் அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications