சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை பேச சவுக்கு சங்கருக்கு ஹைகோர்ட் தடை

Google Oneindia Tamil News

சென்னை: ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்தை பற்றி சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதற்கு தடை விதிக்க கோரி தென்னிந்தியாவை சேர்ந்த ஜி ஸ்கொயர் என்கிற கட்டுமான நிறுவனம் சார்பில் அதன் அதிகாரம் பெற்ற நபரான என்.விவேகானந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துகள் காரணமாக, தங்களது நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களில் 28 பேர், முன்பதிவை ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உறுதியா இருக்கேன்..” பின்வாங்காத சவுக்கு சங்கர்! நீதித்துறையில் ஊழலா? ஐகோர்ட் நீதிபதிகள் முன்பேச்சு “உறுதியா இருக்கேன்..” பின்வாங்காத சவுக்கு சங்கர்! நீதித்துறையில் ஊழலா? ஐகோர்ட் நீதிபதிகள் முன்பேச்சு

ரூ 15 கோடி

ரூ 15 கோடி

இதனால், 15 கோடி ரூபாய் திரும்ப அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தங்களுக்கு இது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதனால் மான நஷ்டஈடாக ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை ஆதாரங்கள்

அடிப்படை ஆதாரங்கள்

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ச்சியாக ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும், தொழில் குறித்தும் சவுக்கு சங்கர் அவதூறாக பேசி வருவதாக, அந்நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி


மேலும், பொள்ளாச்சியில் தங்களது நிறுவனத்திற்கு எந்த திட்டமும் இல்லாத நிலையில் முதல்வர் பயணத்தை தங்களது நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தி சவுக்கு சங்கர் பேசியிருப்பதாகவும் ஜி ஸ்கொயர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேச சவுக்கு சங்கருக்கு தடை விதித்தார்.

சவுக்கு சங்கருக்கு தடை

சவுக்கு சங்கருக்கு தடை

மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மனுவுக்கு பதிலளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஏற்கெனவே ஜி ஸ்கொயர் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் மீது சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

English summary
G Square case: Chennai Highcourt bans Savukku Shankar to speak about that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X