3 நாள் தொடர் விடுமுறை.. சென்னை எக்மோர் டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்.. பயணிகளுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: குடியரசு தினம் வரும் திங்கள் கிழமை வருகிறது. இதானல் வார இறுதி நாட்களையும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக நாளை இரவு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் அடுத்ததாக குடியரசு தினத்திற்கு லீவு கிடைக்கின்றது. அதிலும் திங்கட்கிழமை குடியரசு தினம் வருவதால் சென்னையில் வசிக்கும் பலரும் சனி, ஞாயிறோடு சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் சொந்த ஊர் செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

சென்னை டூ குமரிக்கு சிறப்பு ரயில்
இதையொட்டி நாளை பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ரயில்களில் ஏற்கனவே டிக்கெட்டுகள் புக் ஆகிவிட்டதால் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு இருக்குமா என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களது வசதிக்காக தற்போது தெற்கு ரயில்வே சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக குமரிக்கு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
எப்போது புறப்படும்?
இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:- "சிறப்பு ரயில் (வண்டி எண் 06135) சென்னை எழும்பூரில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.
இதேபோன்று மறுமார்க்கமாக, வரும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை சிறப்பு ரயில் (06136) கன்னியாகுமரியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications