Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேட்டில் ஹேப்பி நியூஸ்.. 2ம் தேதி மாணவர்களுக்கு ஸ்கூல் திறப்பு! சென்னையிலிருந்து ஸ்பெஷல் பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.. பள்ளி திறப்பு மற்றும் வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் 2,510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி எந்தெந்த ஊர்களுக்கு எத்தனை பேருந்துகள் என்பது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. இது மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

பள்ளி கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறித்து நேற்று முன்தினமே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதன்படி, ஜூன் 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அத்துடன், வழிக்காட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.

chennai Koyambedu school students

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், "2025-26ம் கல்வி ஆண்டு ஒன்று முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 2ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் புத்தகங்கள்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும் தாமதம் இன்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிட மாணவர்கள் ஸ்லாங் சொல் செய்தித்தாள் பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும் .

வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும். போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரம் 30 நிமிடத்திற்கு முன்னதாக வருகை புரிந்து மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறப்படுத்த வேண்டும். வாரத்தில் ஒரு நாள் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கோடை விடுமுறை

இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறப்பு மற்றும் வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் 2,510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது..

இதுகுறித்து போக்குவரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு வரும் 30ம் தேதி 570 பேருந்துகளும், 31ம் தேதி 605 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு 30ம் தேதி 100 பேருந்துகளும், 31ம் தேதி 90 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு, கிளாம்பாக்கம்

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு 30ம் தேதி 100 பேருந்துகளும், 31ம் தேதி 90 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்னதாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்" என்று போக்குவரத்துறை அறிவித்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+