கீழே பாலம்! மேலே மெட்ரோ! சென்னையில் மிக முக்கிய ஏரியாவில் வரும்.. இரண்டு அடுக்கு மேஜிக்! இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ பணிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஐடி ஏரியாக்கள் முழுக்க மெட்ரோ + வாகன பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை ஓஎம்ஆரில் (ராஜீவ் காந்தி சாலை) ஒருங்கிணைந்த மேம்பாலங்கள் கட்டும் பணியை சென்னை மெட்ரோ ரயில் தொடங்கவுள்ளது. பெருங்குடி, தரமணி, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் நான்கு மேம்பாலங்கள் ஒருங்கிணைந்த முறையில் OMR இல் வரும், மெட்ரோ பாலம் இரண்டாம் நிலை பாலமாக இருக்கும். உயர்மட்ட சாலை மேம்பாலங்கள் அதற்கு கீழே முதல் நிலை மேம்பாலமாக இருக்கும்.

 Chennai Metro to begin construction of integrated flyovers at OMR Rajiv Gandhi Saalai Chennai

துரைப்பாக்கம் & சோழிங்கநல்லூரில் ரோட்டரி (வட்ட சந்திப்பு அல்லது நான்கு பக்கங்களை இணைக்கும் சந்திப்பு) மேம்பாலம் வரும்.
SRP டூல்ஸ் பகுதியில் T வடிவ மேம்பாலம்,
பெருங்குடியில் எல் வடிவ மேம்பாலம்.

மேம்பாலங்கள் TNRDC & CMRL இடையே செலவை பகிர்ந்து செய்து அதன் அடிப்படையில் கட்டப்படும்.

மெட்ரோ திட்டங்கள்: திருமங்கலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மெட்ரோ கட்டம்-2 திட்டத்தின் கீழ் பல்வேறு மெட்ரோ நிலையங்களை CMRL கட்ட திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயிலோடு சில மாபெரும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அங்கே 12 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் உள்ளே மெட்ரோ செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் செயல்படும் மெட்ரோ நிலையங்கள் போல.. கட்டிடம் உள்ள மெட்ரோ செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக மெட்ரோ ரயில் செல்லும். அங்கு மெட்ரோ ரயில்கள் 12 மாடி கட்டிடத்தின் வழியாகச் சென்று மூன்றாவது மாடி நிலையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டிடத்திற்கான வடிவமைப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேஷன்களுடன் சேர்த்து இந்த கட்டிட மேம்பாடு செய்யப்படும் மற்ற இடங்களான கோயம்பேடு மற்றும் திருமயிலை ஆகியவை 12 மாடி கட்டிடத்தின் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 12 மாடி கட்டிடம் குடியிருப்பு அல்ல.. மாறாக மெட்ரோ பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன பிளான்: கட்டிடங்கள், மெட்ரோ நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஒன்றாகக் கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். மூன்று இடங்களில் நிலையங்கள் கட்டுவதற்கான செலவு கட்டம்-2 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டிற்காக, மாநில அரசிடம் நிதி கோருவோம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமங்கலத்தில், திருமங்கலம் மேம்பாலம் அருகே மூன்று வீடுகள் இருந்த 450 மீ நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ ரயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த நடைபாதையை உருவாக்க திட்டம் இருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியிருக்கும். அதனால் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ்முதல் தரமணி வரை) சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், 16.02.2023 அன்று தொடங்கியது. "காவிரி" மற்றும் "அடையாறு" என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.

இதில் "காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்து தற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. "அடையாறு" சுரங்கம் தோண்டும் இயந்திரம், 250 மீ. தொலைவில் நெருக்கமாகப் பின் தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும். இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை வந்தைடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+