சூப்பரேய்! இனி சென்னை மெட்ரோவில் பெண்கள் பயமே இல்லாம போகலாம்.. மகளிர் தினத்தில் மாஸ் அறிவிப்பு!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண்ணை தொடங்கியுள்ளது. இக்கட்டான சூழலை எதிர்கொண்டால் 155370 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உடனடி உதவி கிடைக்கும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில்: நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வதற்கு ஏராளமானோர் மெட்ரோ ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பீக் ஹவர் நேரங்களில் பயணிகளின் வசதிக்காக 3 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், பயணிகள் சிலர் மெட்ரோ ரயில்களில் விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபடுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண்ணை தொடங்கியுள்ளது. இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்காக சூப்பர் அறிவிப்பு: இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற, பாதுகாப்பான பயண அனுபவத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி, சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.
மகளிர் உதவி எண் 155370 என்பது 24/7 பெண்களால் இயக்கப்படும் சேவை ஆகும். சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
24*7 உதவி எண்: இந்த உதவி எண் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு இருக்க மகளிர் உதவி எண் தவிர, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்கனவே பல முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற "பிங்க் ஸ்குவாட்" எனும் பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆடவர் மற்றும் மகளிருக்கென தனியாக, சுத்தமான பொது கழிப்பிடம் மற்றும் இருபாலருக்கான கழிப்பறைகள், தெளிவான மற்றும் அறியும்படியான அடையாளங்களுடன் அனைத்து நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
உதவி எண் - 155370: பச்சிளம் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களுக்கென, டயபர் மாற்றுவதற்கான வசதியுடன் பாலூட்டும் அறைகள் என அனைத்து ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தொல்லைகளைத் தடுத்தல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த அவசரங்களுக்காக தனியாக "உதவி எண் - 155370" 24/7 அடிப்படையில் நமது பயணிகளுக்காக தயாராக உள்ளன.
ஒவ்வொரு ரயிலும் மகளிருக்காக என்று ஒரு பெட்டி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர் ஆகியோருக்கென 8 இருக்கைகள் ரயிலில் அடையாள குறியீடுகளுடன் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ரயிலின் முதல் மற்றும் கடைசி பெட்டியில், சக்கர நாற்காலிகளுக்கு என்று தனியாக ஒரு இடம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வசதிகள்: அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்துதல் குறித்து, முற்றிலும் சகிப்பு தன்மையற்ற கொள்கை இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் மெட்ரோ ரயில் நிலைய வரைபடங்கள், ரயில் நேரம், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் மற்றும் அணுகல் அம்சங்கள் உள்ளிட்ட விரிவான பயணிகளின் தகவல்கள் இடம் பெற்று உள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவுகளில் உள்ள வேலையிடங்களுக்கு மகளிர் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் உள்ளூரில் உள்ள மகளிருக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ரயில் நிலையங்களை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளை விரைந்து அணுகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது பிஎஸ்என்எல் மட்டும்: அனைத்து பெண் பயணிகளும் மகளிர் உதவி எண் 155370-ஐ (தற்போது BSNL பயன்பாட்டாளர்கள் மட்டும்) தங்கள் தொலைபேசியில் சேமித்து, சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது தேவை ஏற்பட்டால் தயங்காமல் அதைப் பயன்படுத்துமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications