மயிலாப்பூர் கோயிலில் யார் பாருங்க.. கழுத்து நிறைய ஐயப்பன் மாலை.. கேமராவில் பார்த்து ஆடிப்போன சென்னை
சென்னை: சென்னையில் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.. இந்நிலையில், மகேஷ்குமார் என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தபோது, இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார்.. 46 வயதாகிறது.. இவர், கடந்த மாதம் 13ம் தேதி குடும்பத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு, குடும்பத்தினர் அனைவரும் கோயில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தனர்.. அப்போது மகேஷ்குமாரின் குழந்தை கால்களில் அணிந்து இருந்த கொலுசு மாயமாகி இருந்தது தெரியவந்தது.. அந்த கொலுசு ஒரு சவரன் மதிப்புள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்குமார், உடனடியாக மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார்.
போலீஸ் புகார்: போலீசாரும் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போதுதான், மகேஷ்குமார் கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும்போது, குழந்தையிடம் பெண் ஒருவர் பேச்சு கொடுத்து, நைசாக கொலுசை காலிலிருந்து திருடுவது பதிவாகியிருந்தது.
இதையடுத்து, அந்த பெண்ணின் போட்டோக்களை வைத்து, அவர் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினார்கள்.. இறுதியில், அவர் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த கலைவாணி (60) என்பது தெரியவந்தது..
டார்கெட்: இந்த பெண் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து கொண்டு, கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்து திருடுவாராம்.. அதிலும், குழந்தைகளுடன் வரும் குடும்பத்தை மட்டுமே டார்க்கெட் செய்வாராம். பெரியவர்கள் சாமி கும்பிடும்போது, அல்லது கோயில் வளாகத்தில் உட்கார்ந்திருக்கும்போது, குழந்தைகள் ஓடியாடுவார்கள். அப்போது அவர்களிடம் நைஸாக பேச்சு தந்து, காதில், கழுத்தில் உள்ள நகைகளை திருடுவது கலைவாணியின் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
வயதான பெண் என்பதாலும், கழுத்தில் மாலை, நெற்றியில் குங்குமம், சந்தனத்துடன் காட்சியளிப்பதாலும் இவர் மீது யாருக்கும் சந்தேகம் வருவதில்லை. குழந்தைகளை மட்டுமே குறி வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
விசாரணை: தற்போது கலைவாணி கைதாகி உள்ளார். இவரிடமிருந்து குழந்தையின் ஒரு சவரன் தங்க கொலுசு மீட்கப்பட்டுள்ளது.. கைது நடவடிக்கைக்கு பின்னர் கலைவாணி சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பு எந்தெந்த கோயில்களில் இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது குறித்த விசாரணையையும் கலைவாணியிடம் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications