24 மணி நேரத்தில்.. போலீஸ் சம்பவம்.. சென்னையில் காணாமல் போன மாணவி.. மதுரையில் கண்டுபிடிப்பு!
சென்னை: சென்னையில் காணாமல் போன மாணவியை சென்னை போலீஸார் மதுரையில் கண்டுபிடித்தனர். காவலர்கள் மாணவியை சென்னை அழைத்து வந்து கொண்டு இருக்கின்றனர்.
கடந்த 10ம் தேதி சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் காணாமல் போனார். திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த அந்த மாணவிக்கு வயது 14. இதையடுத்து பள்ளி மாணவி காணவில்லை என்று சமூக வலைத்தளங்களில் போஸ்டர் பரவியது. 10-01-2025 மாலை 6.00 மணி முதல் காணவில்லை.. அவர் இந்தி டியூஷனுக்கு சென்றார்.. அதன்பின் வீட்டிற்கு வரவில்லை. இதனால் போலீசில் புகார் அளித்துள்ளோம்.

Image: wise created
அவரை கண்டுபிடிப்பவர்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிட்டு ஒரு எண் கொடுக்கப்பட்டது. அதோடு அந்த மாணவியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. மாணவிக்கு முகத்தில் நெற்றி அருகே தழும்பு இருக்கும்.. அதேபோல் முகத்தில் மச்சம் இருக்கும் என்று அடையாளம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த மாணவி எங்கே சென்றார் என்று சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வந்தனர். அதன்படி சென்னையில் அவர் திருவொற்றியூர் அருகே பேருந்து ஏறி உள்ளார்.
இதனால் அவர் வேறு மாவட்டம் அல்லது அருகே உள்ள மாநிலத்திற்கு சென்று இருக்கலாம் என்று கண்டுபிடித்தனர். முதலில் அவரை யாராவது கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கடத்தப்படவில்லை.
தானாக பயணம்:
அவர் தானாகவே பயணம் செய்துள்ளார். அவரை யாரும் கட்டுப்படுத்தி அழைத்து செல்லவில்லை என்று போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மாணவியை மீட்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் போஸ்ட் செய்து வந்தனர். இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து மாணவியை தேடி ஆந்திரா, திருச்சி, தஞ்சாவூர், மதுரை என தனிப்படை விரைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவி மதுரைக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரையில் இருக்கும் இன்பார்மர்கள் மூலம் மாணவி பாதுகாப்பாக இருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனே பெண் போலீசார் அனுப்பப்பட்டு அந்த மாணவி மீட்கப்பட்டார். சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் உடனே சென்னையில் இருந்து மதுரைக்கு விரைந்தனர்.
சென்னையில் காணாமல் போன மாணவியை சென்னை போலீஸார் மதுரையில் கண்டுபிடித்தனர். காவலர்கள் மாணவியை சென்னை அழைத்து வந்து கொண்டு இருக்கின்றனர். இதற்கான வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போலீசாருடன் பெற்றோர் ஒருவரும் மதுரை சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
இன்று மாலை அந்த மாணவி வீட்டிற்கு திரும்புவார். பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் போலீசார் மிக வேகமாக செயல்பட்டு உள்ளனர்.
மாணவி மாயம் என்பதால் கிட்டத்தட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த மாணவியை மீட்டு உள்ளனர். போலீஸ் புகார் அளித்த 24 மணி நேரத்தில் அந்த மாணவியை கண்டுபிடித்து உள்ளனர். 10ம் தேதி மாலை புகார் அளித்து 11ம் தேதி இரவு மாணவியின் இடத்தை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். போலீசாரின் துரிதமான செயல்பாடு பலர் தரப்பில் இருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications