"தங்கச்சியைதான் கட்டிக்குவேன்".. அடம் பிடித்த ரவுடி.. அம்மிக்கல்லை தலையில் போட்டு.. பிணமான மணிகண்டன்
சென்னையில் ரவுடியை அம்மிக்கல் போட்டு கொன்றுள்ளனர்
சென்னை: "தங்கச்சியைதான் கல்யாணம் செய்வேன்" என்று அடம்பிடித்த ரவுடியை அம்மிக்கல்லை தூக்கி போட்டே கொன்றுள்ளனர்.. சென்னையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. இவருக்கு அப்பு என்ற பட்ட பெயர் உண்டு.. 34 வயதாகிறது. இவர் ஒரு ரவுடி.. கொலை, அடிதடி என ஏகப்பட்ட கேஸ்கள் இவர் மீது உள்ளன.

2 வருஷத்துக்கு முன்னாடி உயிரிழந்த பவுலினா என்ற பெண் தாதாவின் மகன்தான் இவர்.. இவருக்கும், மாமன் மகன் எட்விட் என்பவருக்கும் தாய்மாமன் சொத்து தகராறு இருந்து வந்தது.. இருந்தாலும் அடிக்கடி நன்றாக உறவாடி கொள்ளவும் செய்வார்கள்.. அப்படித்தான் சம்பவத்தன்று இரவு 2 பேரும் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்
அப்போது போதையில் "உன் தங்கச்சியை எனக்கு கல்யாணம் செய்து கொடு" என்று ரவுடி கேட்க, அதற்கு எட்விட் மறுப்பு தெரிவித்துள்ளார்.. "உன்னை மாதிரி ரவுடிக்கு கட்டி வெச்சா, அவ வாழ்க்கை பாழாய் போய்டும்" என்று மறுப்பு சொன்னார். இதனால் "கட்டினால் உன் தங்கச்சியைதான் கட்டுவேன்" என்று சொல்லி கொண்டே போதையில் அங்கேயே விழுந்து விட்டார்.
எனினும் இதை கேட்டு எட்விட் பயந்துவிட்டார்.. ஒருவேளை நிஜமாகவே தங்கச்சியை கல்யாணம் செய்து கொண்டுவிடுவானோ, அல்லது கொலை செய்துவிடுவாரோ என்றெல்லாம் மணிகண்டனை நினைத்து கலக்கமடைந்தார்.. ராத்திரி எல்லாம் தூங்க முடியாமல் தவித்தார்.. அதனால் விடிகாலை வீட்டுக்கு வந்து, அம்மிக்கல்லை எடுத்து கொண்டு போய், தூங்கிக் கொண்டு இருந்த மணிகண்டன் தலையில் போட்டுவிட்டார்..
இதில், மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.. இதை பார்த்ததும், எட்விட் தப்பித்து ஓடிவிட்டார்.. தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார் மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த எட்வினை கைது செய்து விசாரித்தும் வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications