நாளை லீவ் கிடையாது.. சென்னையில் அனைத்து பள்ளிகளும் செயல்படும்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை (ஜனவரி 10) செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். டிசம்பர் 3 ஆம் தேதி தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும். வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை முழு பணி நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் இலங்கைக்கு மிக அருகில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி டிட்வா புயல் உருவானது. அதன்பிறகு இலங்கையின் பல்வேறு பகுதிகளை அதி கனமழையால் புரட்டி எடுத்தது. பின்னர் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி பயணித்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி கடலிலேயே வலுவிழந்தது.

இதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என படிப்படியாக வலு குறைந்தது. இது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை, காஞ்சிபுரம் கடலோரப் பகுதியில் தொடர்ந்து ஆட்டம் காட்டி வந்தது.
3 நாட்களாக வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவி வந்ததால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும். வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை முழு பணி நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications