அந்த "பிரபலம்" விபச்சாரத்திலா? சென்னை தி.நகரில் ரவுண்டு கட்டிய போலீஸ்.. பரபரத்து போன அபார்ட்மென்ட்
சென்னை: சென்னை தி.நகர் அப்பார்ட்மென்ட்டில், பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. இதில் சம்பந்தப்பட்ட இன்னொருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.. யாரிவர்? எப்படி சிக்கினார்?
ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர் 42 வயது ரவுடி கருக்கா வினோத்.. எனவே, என்ஐஏ அதிகாரிகள், கருக்கா வினோத் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் நதியா என்பவர் பெயர் அடிபட்டது.

ஜாமீன்: தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்தவர் 37 வயது நதியா.. கருக்கா வினோத்தை பல லட்சம் செலவு செய்து ஜாமீனில் எடுத்தது நதியாதான்... கருக்கா வினோத்துடன் சேர்ந்து பாலியல் தொழில், மது பாட்டில்கள், கஞ்சா வியாபாரம் என அத்தனை பிசினஸையும் செய்திருக்கிறார் நதியா.. இதற்கு பிறகுதான், நதியா வீட்டிற்குள் போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது 17 பள்ளி மாணவிகளின் 170 ஆபாச வீடியோக்கள், நதியா வீட்டில் இருந்ததை கண்டு போலீசார் உறைந்துபோனார்கள்.. அத்தனையும் பள்ளி மாணவிகள் சம்பந்தப்பட்ட வீடியோ என்பதால், டிஜிபி சங்கர் ஜிவால் கவனத்திற்கு, இதனை கொண்டு சென்றிருக்கிறார்கள் போலீசார்.
வளசரவாக்கம்: சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டதையடுத்து, நதியா விவகாரம் தீவிரமானது.. சென்னை வளசரவாக்கத்தில் நதியாவுக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட்டில், விபச்சாரம் நடப்பதாக கேள்விப்பட்டு அங்கு போலீசார் சென்றபோது, பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிலும், 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க, 75 வயது ராமச்சந்திரன் என்ற தாத்தாவும் அங்கு வந்திருந்ததை கண்டு போலீசார் விக்கித்து போனார்கள்.
பிரெயின் வாஷ்: பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம், அந்த மாணவிகளுக்கு மூளைச்செலவு செய்வாராம் நதியா.. அவர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, பணத்தாசையையும் காட்டி, அந்த மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளியிருக்கிறார்.
காமம் தலைக்கேறிய வயதானவர்கள் பலர், தங்களுக்கு சிறுமிகள் தான் வேண்டும் என்று கேட்டால், 17 வயதே ஆன மாணவிகளை, அவர்களுடன் லாட்ஜூக்கு அனுப்பி வைப்பாராம் நதியா.. ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பணத்தை வசூல் செய்து வந்துள்ளார் நதியா.. இறுதியில், நதியா, அந்த 75 வயது தாத்தா உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேனேஜர்: மற்றொருபக்கம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்களை லிஸ்ட் எடுத்து, குழந்தைகள் நல குழுவும் விசாரணையை ரகசியமாக நடத்தி வருகிறது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்ட நிலையில், விசாரணையும் தீவிரமாகி உள்ளது. இதில், தி.நகரில் சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு நடத்தி வரும் மேனேஜர் ஒருவர், பள்ளி மாணவிகளுடன் பலமுறை பயன்படுத்தி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
நதியா அனுப்பும் பள்ளி மாணவிகளை, அவர்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொடர்பு வைத்திருந்தாராம் இந்த அப்பார்ட்மென்ட் மேனேஜர்.. இதையடுத்து, இவரையும் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம்: அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலத்தின்படி, பள்ளி மாணவிகளை பாலியலுக்கு பயன்படுத்தி கொண்ட நபர்கள் லிஸ்ட்டையும், விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கையில் எடுத்துள்ளார்களாம்.. இதில் பல பிரமுகர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள.
அதேபோல, மாணவிகள் இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஆதாரங்களையும் வைத்து, ஒவ்வொருவராக கைது செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் இன்னொருவர் தற்போது சிக்கியிருக்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நதியா, பள்ளி மாணவி ஒருவரை ஹைதராபாத்துக்கே அழைத்து சென்றுள்ளாராம். உல்லாசமாக இருப்பதற்காக ஹைதராபாத் ஓட்டலில் ரூம் போட்டுள்ளாராம் அந்த நபர்.
பிரபலம்: எனவே, ஓட்டலில் வைத்தே அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக தனிப்படை ஒன்று ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆக, ஒரு பக்கம் விபச்சார தடுப்பு பிரிவு, இன்னொரு பக்கம் புறம் குழந்தைகள் நல அமைப்புகள் என தனித்தனியாக விசாரணை நடத்தி பள்ளி மாணவிகளை சீரழித்த நபர்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுத்து வருவதால், மிகப்பெரிய புள்ளிகள் இதில் சிக்கலாம் என்கிறார்கள்..!!
இதில் இன்னொரு கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. 17 வயது மாணவியை, ஆண்டு தேர்வு நடக்கும்போது ஹைதராபாத்துக்கு அழைத்து சென்ற நதியா, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார்.. பிறகு, மறுபடியும் அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த கொடுமையையும் போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்.. மாணவிகளை பாலியல் தொழிலுக்கு மிரட்டி ஈடுபடுத்திய நதியாவுக்கு, வேறு சில முக்கிய நபர்களுடன் தொடர்பு இருக்கும் என்பதால் விசாரணை மும்முரமாகி உள்ளது.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications