தாம்பரத்தில் விழுந்த குஷி! சோழிங்கநல்லூருக்கு ஹேப்பி! இனி சென்னையில் டிராபிக் இருக்காது! ரூட் மாறுது
சென்னை: சென்னையில் வாகன நெரிசலை குறைப்பதற்காக, தற்போதும் ஒரு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகி உள்ளது.. சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தமிழக அரசு பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன...

அந்த வகையில், 5 இடங்களில் மேமேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒருபுறம் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தாலும்கூட நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை.
மாநகராட்சி: அதுமட்டுமல்ல, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. ஆனால், பெரும்பாலான ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் கஸ்டமர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சென்னையில் பார்க்கிங் வசதியின்றி செயல்பட்ட 80 ஓட்டல்களுக்கு சென்னை மாநகராட்சி சமீபத்தில் சீல் வைத்தது.
தற்போது சென்னையில் நெரிசலை குறைக்கும் வகையில், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. இதன் ஒருபகுதியாக, நெரிசலை குறைக்கும் வகையில் சோழிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிகள்: இதற்கு காரணம், சென்னை ராஜிவ்காந்தி சாலை, அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை, ஏராளமான ஐடி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், தியேட்ட்ரகள், பள்ளிகள் உள்ளன. எனவே இந்த சாலையில், எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
அதுவும் இல்லாமல், மெட்ரோ ரயில் பணிகளும் இங்கு நடந்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால்தான், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாவலூர்: சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து நாவலூர், கேளம்பாக்கம் செல்லும் வாகனங்கள் குமரன் நகர் சந்திப்பில் எப்போதும்போல் நேராக செல்லலாம். நூக்கம்பாளையம் சாலை மற்றும் சுனாமி குடியிருப்பு செல்லும் வாகனங்கள் தனியார் கல்லூரி சந்திப்பில் யூடர்ன் செய்து, குமரன் நகர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி செல்லலாம்.
சுனாமி குடியிருப்பு மற்றும் நூங்கம்பாளையம் சாலையிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் வாகனங்கள் குமரன் சந்திப்பில், இடதுபுறம் திரும்பி 150 மீட்டர் தொலைவில் உள்ள யூடர்னில் திரும்பி நாவலூர், கேளம்பாக்கம் செல்லலாம்.
சோழிங்கநல்லூர்: திருவள்ளுவர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி நாவலூருக்கும், தனியார் கல்லூரி சந்திப்பில் யூடர்ன் செய்து, சுனாமி குடியிருப்பு மற்றும் சோழிங்கநல்லூர் சென்றடையலாம். நாவலூரில் இருந்து வரும் வாகனங்கள் குமரன் நகர் சந்திப்பை அடுத்த யூடர்னில் திரும்பி திருவள்ளுவர் சாலை சென்றடையலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்தை கடைபிடித்து போக்குவரத்து நெரிசலின்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications