சென்னை புழலில் சம்பாதிக்கும் பணத்தை தராத கணவன்.. நினைத்தே பார்க்க முடியாத தண்டனை தந்த மனைவி
சென்னை: சென்னை புழல் லட்சுமிபுரம் காந்தி தெருவைச் சேர்ந்த காதர் பாஷா எனபவ கட்டிட தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார்கள். மூன்றாவது மனைவியுடன் கடந்த பல ஆண்டுகளாகவே காதர் பாஷா வசித்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்கு தராமல் இருந்ததுடன் வேறு பெண்களுடன் காதர் பாஷா தொடர்பில் இருந்தாராம். இதனால் கோபம் அடைந்த மனைவி என்ன செய்தார் தெரியுமா? பாருங்கள்.
இன்றைக்கு கணவன் மனைவி இடையே சண்டை வருவது இயல்பான ஒன்று தான் என்றாலும், இருவரில் யாராவது ஒருவர் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். பொதுவாக பல ஆண்கள் தனது மனைவி என்பது தனது சொத்தாக பார்ப்பதால், அவர்களை பலவந்தப்படுத்துகிறார்கள். சிலர் மோசமாக நடந்து கொள்ளவும் செய்கிறார்கள். அதேபோல் சில பெண்களுமே ஆண்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை புழலில் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் காந்தி தெருவைச் சேர்ந்த 38 வயதாகும் காதர் பாஷா என்பவர் கட்டிடத் தொழிலாளி ஆவார். அந்த பகுதியில் கட்டுமான வேலைகளுக்கு சென்று வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.. இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதாகும் நிலோபர் நிஷா என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். காதர் பாஷா, சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் இருந்ததுடன், மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த நிலோபர் நிஷா, வீட்டில் அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணெயை கணவர் காதர் பாஷா மீது ஆவேசத்துடன் ஊற்றினாராம். உடல் முழுவதும் கொதிக்கும் எண்ணெய் பட்டதால் படுகாயம் அடைந்த காதர் பாஷா வலியால் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காதர் பாஷாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காதர் பாஷா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து நிலோபர் நிஷாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications