Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களே போன் பண்ணுனா வீட்டுக்கே வரும்.. மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வீட்டில் பெரிய அளவில் உள்ள உடைந்த நாற்காலிகள், ஷோபாக்கள், கட்டில், மெத்தை உள்பட உடைந்த பழைய பெரிய குப்பைகளை, அருகில் உள்ள குப்பை தொட்டிக்கு போய் போடாதீர்கள். வீட்டில் இருந்தபடியே சென்னை மாநகராட்சியை அழைத்தால் பெரிய கழிவுகள் மற்றும் குப்பைகளை அவர்களே வண்டியில் எடுத்து கொண்டு போவார்கள்.

வங்க கடலில் உருவான மிக்ஜம்' புயல் ஆந்திராவில் கடந்த டிசம்பர் 5-ந்தேதி கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4, ஆகிய தேதிகளில் மிக அதிகனமழை பெய்தது. குறிப்பாக கடந்த டிசம்பர் 3ம் தேதி இரவு தொடங்கி டிசம்பர் 4ம் தேதி காலை வரை விடாமல் 36 மணி நேரம் மழை கொட்டியது.

 Chennaiites can call the toll free number for them to pick up the old things: Radhakrishnan ias

இந்த புயல் காரணமாக கொட்டித்தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடானது. அதேநேரம் சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் 4 மாவட்ட மக்களும் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார்கள். வெள்ளப்பாதிப்பால் பலர் உடமைகளை இழந்துள்ளனர். ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

சென்னையில் பலரது வீடுகளின் இருந்த உடைகள்ஒரே நாளில் குப்பையாக மாறிப்போனது. தலையனை, மெத்தை, ஷோபா, உடைந்த கட்டில், வீணான கம்ப்யூட்டர்கள், மின் சாதன பொருட்கள், துணிகள் என பல பொருட்கள் வீணாகிபோய் உள்ளன. இந்த வீணாய்போன பொருட்களை மக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள குப்பை தொட்டிகளின்பக்கத்தில் வைத்துவிட்டு செல்கிறார்கள்.

இதனிடையே பல இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லாத காரணத்தால் மக்கள் சாலைகளில் குப்பை தொட்டிகள் இருந்த பகுதிகளில் அவற்றை வைத்துவிட்டு செல்கிறார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் மொத்தம் 57 ஆயிரத்து 192 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் பலர் குப்பைகளை மொத்தம் மொத்தமாக கொட்டியபடியே இருக்கிறார்கள். இதன் காரணமாக சாலைகள் குப்பைமேடாக மாறுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில் உங்கள் வீட்டில் பெரிய அளவில் உள்ள உடைந்த நாற்காலிகள், ஷோபாக்கள், கட்டில், மெத்தை உள்பட உடைந்த பழைய பெரிய குப்பைகளை, அருகில் உள்ள குப்பை தொட்டிக்கு போய் போட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சியின் வாகனத்தை அழைத்தால் அவர்களே வந்து குப்பைகளை வாங்கி செல்வார்கள் என்று அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அன்பான சென்னை மக்களே, உங்கள் வீடுகளில் உள்ள பெரிய ஷோபாக்கள், மெத்தை, தலையணை, உடைந்த நாற்காலிகள் போன்றவற்றை தெருமுனையில் உள்ள குப்பை தொட்டி அருகே வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரரான உர்பேஸர் சுமீத்தின் கட்டணம் இல்லாத தொலைப்பேசி எண்ணான 18005712069 என்ற எண்ணிற்கு அழைந்தால் உங்கள் வீட்டிற்கே வந்து குப்பைகளை வாங்கி செல்வார்கள் " இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது-

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+