"இன்னைக்கு ஒரு புடி!" தோசை, சட்னி என செஸ் ஒலிம்பியாட் உணவுகளை.. வீட்டில் செய்து ருசிக்கும் வீரர்கள்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களின் மனதையும் நாவையும் கவர்ந்தது என்னவோ நம்ம ஊர் உணவுகள் தான்!
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தலைநகர் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரம்மாண்டமாக நிறைவு பெற்றது.

செஸ் ஒலிம்பியாட்
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா மூன்று அணிகள் இடம் பெற்று இருந்தன. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியினர் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். அதேபோல தனிநபர் பிரிவில் குகேஷ், நிகால் சரினுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் இளம் கிரண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவுக்கு தனிநபர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது.

வெளிநாடு வீரர்கள்
இந்த ஒலிம்பியாட் போட்டிகளில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் இருந்து வந்த வீரர்கள் தங்க ஏதுவாக மாமல்லபுரத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சென்னைக்கு வந்த வெளிநாட்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது முதல் அவர்கள் கிளம்பும் வரை தமிழக அரசு மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது.

தமிழக அரசு
தமிழக அரசு செய்திருந்த வெளிநாட்டு வீரர்கள் பலரும் பாராட்டினர். மேலும் செஸ் ஒலிம்பியாட் நடந்த சமயத்தில் வீரர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் யோகா மற்றும் தியானப் பயிற்சியும் வழங்கப்பட்டது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, செஸ் போட்டிகளில் கவனம் செலுத்தப் பெரியளவில் உதவியதாகப் பல வெளிநாட்டு வீரர்கள் தெரிவித்தனர். செஸ் ஒலிம்பியாட்டில் யோகா கற்றுத் தரப்பட்டது அதுவே முதல்முறையாகும்.

தென்னிந்திய உணவுகள்
எல்லாவற்றையும் விடச் சென்னைக்கு வந்த வெளிநாட்டு வீரர்களின் மனதையும் நாவையும் கவர்ந்தது என்னவோ நம்ம ஊர் உணவுகள் தான். இட்லி, தோசை, பொங்கல் என நம்ம ஊர் உணவுகளை வெளிநாட்டு வீரர்கள் விரும்பி சாப்பிட்டனர். வெளிநாட்டு வீரர்களுக்கு நம்ம ஊர் உணவுகளின் காரணம் காரம் அதிகம் தான் என்றாலும் கூட தென்னிந்திய உணவுகள் ரசித்தே ஒரு பிடி பிடித்தனர்.

இன்னைக்கு ஒரு புடி
தற்போது வீரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்ட போதிலும் இன்னும் அவர்கள் நாவில் இருந்து நம்ம ஊர் உணவின் சுவை மறையவில்லை போல! வெளிநாடுகளில் தங்கள் சொந்த வீடுகளிலும் அவர்கள் தென்னிந்திய உணவுகளைச் செய்து ருசித்து வருகின்றனர். இது தொடர்பான படங்களையும் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

தோசை
அப்படித்தான் செஸ் ஒலிம்பியாட்டிற்காக சென்னை வந்திருந்த கீர்ட் வான் டெர் வெல்டே தனது வீட்டில் தோசை, சட்டினி என தென்னிந்திய உணவுகளை ஒரு பிடி பிடித்துள்ளார். அந்த படங்களைப் பகிர்ந்த அவர், "செஸ் ஒலிம்பியாட்டில் வழங்கப்பட்ட உணவுகளைப் பார்த்து என் அம்மா ஈர்க்கப்பட்டார். இதனால் அவரே எங்களுக்கா தோசை சுட்டார்" எனப் பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications