செய்தியாளர் மீது தாக்குதல்.. காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்! முதலமைச்சர் அதிரடி
திருப்பூர்: தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக நேசபிரபு பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக இவர் செய்தி சேகரிக்க செல்லும் இடங்களில் மர்ம நபர்கள் இவரை நோட்டம் விட்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இவரை தேடி மர்ம நபர்கள் வீடு வரை வந்திருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டில் இருந்திருக்கவில்லை.

இந்த விஷயத்தை அறிந்த நேசபிரபு உடனடியாக அவசர எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்திற்கும் போன் செய்து புகார் அளித்திருக்கிறார். ஆனால் காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாததால், நேரில் வந்து புகார் அளிக்கும்படி மறு முனையில் பேசிய போலீசார் கூறியிருக்கிறார்.
வீட்டிற்கு சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த நேசபிரபு மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். பல்லடத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற அவர், மீண்டும் போலீசுக்கு அழைத்துள்ளார். போலீசாரிடம் காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம நபர்கள் நேசபிரபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் நேசபிரபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்திருக்கிறார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
"திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணையிட்டுள்ளேன். மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications