Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவல் நிலைய மரணங்களே இல்லாத நிலையை ஏற்படுத்துங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்களே இல்லாத நிலையை ஏற்படுத்தி தாருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் விழா | MK Stalin Speech

    தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அணிவகுப்பு

    அணிவகுப்பு

    இந்த விழாவில் காவல் துறை சார்பில் வெங்கையா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜிவால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

    முதல்வர் பேச்சு

    முதல்வர் பேச்சு

    பின்னர் குடியரசுத் தலைவர் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு வழங்கினார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், குடியரசுத் தலைவர் பதக்கத்தை பெறுவதால் தமிழக காவல்துறை உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் காவலர் முதல் டிஜிபி வரையிலான காவல் துறையினர் கொடியை இனி தங்கள் சீருடையில் அணியவுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை தனக்கு தானெ சல்யூட் அடித்துக் கொள்ளக்கூடிய சிறப்பு இது; தமிழ்நாடுக்கே வரலாற்று சிறப்புமிக்க பெருமை இது. உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீரைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் கொடியை தமிழ்நாடு பெறுகிறது. குடியரசுத் தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் பெறுகிறது.

     காவல் நிலைய மரணங்கள்

    காவல் நிலைய மரணங்கள்

    தமிழகத்தில் கடந்த ஓராண்டாக சாதிக் கலவரங்கள், மத மோதல்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைந்துள்ளன. தமிழக காவல் துறையின் செயல்பாடு முன்பை விட அதிக அளவு பாராட்டைப் பெற்று வருகிறது. அதற்காக காவல் நிலைய மரணங்களே இல்லை என சொல்லவில்லை. ஆனால் காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளன. 2018ம் ஆண்டு 21க இருந்த காவல் நிலைய மரணங்கள், நடப்பு ஆண்டில் 4க குறைந்துள்ளது. ஆனால் காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறையினர் ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக்கூடாது.

    மகளிர் காவலர்கள்

    மகளிர் காவலர்கள்

    காவல் துறையில் முதல்முதலில் மகளிரை நியமனம் செய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. காவல் துறையில் தற்போது ஒரு டிஜிபி, 3 ஏடிஜிபி, 14 ஐஜி, 20 ஆயிரம் காவலர்கள் மகளிராக உள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+