பொள்ளாச்சி வழக்கு.. யார் வெட்கித் தலை குனிய வேண்டும்? மு.க.ஸ்டாலினால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தை பாதுகாக்க முயற்சித்த சார்கள் மானமிருந்தால் வெட்கி தலைகுனியட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இதற்கு, அந்த குற்றவாளி கூடாரத்தை கைது செய்தது என் தலைமையிலான அரசுதான் என்று பதில் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேரும், குற்றவாளிகள் என்று கோவை மாவட்ட மகளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், பைப் பாபு, அருண் குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், அருளானந்தம் ஆகிய 9 குற்றவாளிகளுக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Chief Minister MK Stalin and Opposition Leader Edappadi Palaniswami exchanging strong words regarding the verdict of Pollachi Sexual Assault Case

இந்த தீர்ப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில், அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது.

வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! யார் வெட்கித் தலை குனிய வேண்டும்? அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

யார் அந்த SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIRஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும். அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க,
மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+