செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்.. மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார். வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 சிறை தண்டனை

சிறை தண்டனை

இதன் காரணமாக 1908ம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார். தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழி, தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார்.

நிலைத்து நிற்கும் வ.உ.சி

நிலைத்து நிற்கும் வ.உ.சி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் 1975 முதல் 1976 வரை தூத்துக்குடியில் கட்டிமுடிக்கப்பட்ட 4 கப்பல் தளங்களுக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் பெயர் சூட்டப்பட்டது. 1998ஆம் ஆண்டு கருணாநிதியால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய 16 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் மரியாதை

மு.க.ஸ்டாலின் மரியாதை


இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் அவரது படம் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வ.உ.சிதம்பரனாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் வந்த அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அமைப்புகள் மரியாதை

அமைப்புகள் மரியாதை

இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+