புதுபொலிவு பெற்ற அம்பேத்கர் மணிமண்டபம்! சிலை வழங்கிய திருமாவளவன்! திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் முழுவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையானது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

முதல்வர் திறப்பு
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வழங்கிய அம்பேத்கர் முழுவுருவச் சிலையினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருமா வழங்கிய சிலை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், அம்பேத்கரின் 132-ஆவது பிறந்தநாளான கடந்த 14.4.2022 அன்று அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை மணிமண்டபத்தில் நிறுவுவதற்காக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் 14.5.2022 அன்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுப்பணித்துறை
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீயாய் வேலை செய்து அந்தப் பணிகளை விரைந்து முடித்தனர். அத்தோடு மட்டுமல்லாமல் அம்பேத்கர் மணிமண்டபமும் சீரமைக்கப்பட்டு புது பொலிவூட்டப்பட்டது. நூலகங்களுக்கு புதுப் புத்தகங்கள் வாங்கப்பட்டு தனி நூலகர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதேபோல் பாழடைந்து காணப்பட்ட கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டுள்ளன.

திருமா ஹேப்பி
தனது கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபம் புதுப்பிக்கப்பட்டதாலும் தாம் வழங்கிய சிலையை ஏற்று அதனை அங்கு நிறுவியதாலும் விசிக தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதிமுக ஆட்சியிலும் அவர் இதே கோரிக்கையை வைத்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications