சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவிற்கு ஒப்புதல்! ஆளுநர் ரவி முன்னிலையில்.. மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை : தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

Recommended Video

    PM Modi-ஐ மேடையில் வைத்துக்கொண்டே Dravidian Model பற்றி பேசிய Stalin #Politics

    ஸ்டாலின் முதல்வராக வந்ததும் நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது.

    அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்பு கட்டிவைத்து 3 கிமீ ஓட்டி சென்ற டிரைவர்... பதறவைக்கும் வீடியோ அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்பு கட்டிவைத்து 3 கிமீ ஓட்டி சென்ற டிரைவர்... பதறவைக்கும் வீடியோ

    இதையடுத்து, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றன. ஆனாலும், நீட் விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.

     டெல்லி சென்றபோது

    டெல்லி சென்றபோது

    சமீபத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது கூட நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் மனு அளித்திருந்தார். இருப்பினும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மோடி வருகை

    மோடி வருகை

    இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார்.

     நீட் கோரிக்கை

    நீட் கோரிக்கை

    இந்த விழாவின்போது பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தார் முதல்வர் ஸ்டாலின். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.

    மேடையில் பிரதமர், ஆளுநர்

    மேடையில் பிரதமர், ஆளுநர்

    நீட் தேர்விற்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மேடையில் இருந்தபோதே நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதே மேடையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chief Minister Stalin is to give a petition to PM Narendra Modi regarding NEET exemption for Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X