உலக கோப்பையில் இந்தியா ஜெயிக்கிற மாதிரி.. முதல்வரும் ஜெயிக்க போகிறார்..காங். எம்எல்ஏ செல்வ பெருந்தகை
சென்னை: ஆளுநர் எதையும் பொருட்படுத்தாமல் எதோ முடியாட்சி நடப்பதை போல தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை பேசினார். மேலும், இந்திய அணி வெற்றி பெறுவதை போல நமது முதல்வர் வெற்றி பெற போகிறார் என்று பேசினார்.
நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு, ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.. இந்த 10 மசோதாக்களில் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை என்று கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்றைய தினம் 18ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடியது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் தாக்கல் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை பேசியதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர்களே இன்னும் 10 நிமிடத்தில் சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற இருக்கிறது. எதற்காக இந்த சூரசம்ஹாரம் இந்த தமிழ்நாட்டில் நடக்கிறது. தமிழ் முருகர் கடவுள் தமிழ்நாட்டிற்கு படையெடுப்புகள் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அழிக்க வரும் போது முருக பெருமான் விழித்தெழுந்து சூரசம்ஹாரம் செய்த நாள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அப்படிப்பபட்ட தீர்மானத்தை கொண்டு வந்த சூரரை போற்றுகிறோம். பல முன்னுதாரணங்களை எம்.எல்.ஏக்கள் இந்த அவையில் எடுத்து வைத்தார்கள். இரட்டை நிலைப்பாடு... ஆட்சியில் இருந்தால் ஒரு நிலைப்பாடு. ஆட்சியில் இல்லை என்றால் ஒரு நிலைப்பாட்டை ஒரு தேசியக் கட்சி எடுத்து வந்துள்ளது.

முதல்வர் எதிர்க்கட்சியாக இருந்த போது என்ன நிலைப்பாடோ அதை ஆளும் கட்சியாக இருக்கும் போதே முன்னெடுத்து செல்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பேரவையில் பேசினேன். நமது முதல்வர் நாகலாந்து முதல்வர் அல்ல.. தமிழ்நாட்டின் முதல்வர்.. அவரை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொன்னது இன்று வரை அவைக்குறிப்பில் உள்ளது. ஆகவே உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலையில் முனைப்பாக செயல்பாட்டில் ஈடுபட்டு உள்ளார்.
ஆளுநரை பற்றி விமர்சிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. பெருந்தன்மையை முதல்வரிடம் பார்க்கிறோம். ஒரு ஆளுநர் எதையும் பொருட்படுத்தாமல் எதோ முடியாட்சி நடப்பதை போல தொடந்து மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால் அவர் விளையாட்டு வேண்டும் என்றாலும் விளையாடட்டும்.. நாளை நமது இந்திய அணி வெற்றி பெறுவதை போல நமது முதல்வர் வெற்றி பெற போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications