அமைதியாக போராடிய சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்.. இரவோடு இரவாக கைது செய்த போலீஸ்.. பரபரப்பு!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் நேற்று பெரிய கலவரமாக மாறியது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு மொத்தமும் போர்க்களமாக மாறியுள்ளது. முக்கியமாக டெல்லியில் இரண்டு நாட்களாக மாபெரும் கலவரமும் போராட்டமும் நடந்து வருகிறது.

இங்கு எப்படி
சென்னையிலும் இந்த சட்டத்திற்கு எதிராக கடுமையாக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் ஐஐடி, லயோலா பல்கலைக்கழகம், நியூ காலேஜ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கியமாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் சென்றது
இந்த போராட்டத்தை கைவிடும் படி போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் மாணவர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை.நேற்று முதல் நாள் போலீசார் சென்னை பல்கலைக்கழகம் உள்ளே சென்றனர். அங்கு மாணவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

இரண்டு நாள் போராட்டம்
இரண்டு நாட்களாக அங்கு மாணவர்கள் இருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 17 மாணவர்களை போலீசார் நள்ளிரவில், கைது செய்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அமைதியாக போராட்டம் நடந்து வந்த போதும் கூட போலீசார் மொத்தமாக உள்ளே சென்று கைது செய்தனர்.

ஏன் இப்படி
கைது செய்யப்பட்ட 17 மாணவர்களும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இதனால் தற்போது அங்கு பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாணவர்கள் அங்கு பெரிய அளவில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications