1, 2, 3.. ஒரே நேரத்தில் 3 விஷயங்கள்.. மாஸ் காட்டும் எடப்பாடியார்.. குவியும் பாராட்டு.. திணறும் திமுக
நீர்மேலாண்மையில் தமிழகம் விருது பெற போகிறது
சென்னை: மொத்தம் 3 விஷயங்களில் மாஸ் காட்டி உள்ளார் எடப்பாடியார்.. தேர்தல் நெருங்கும் சமயத்தில் எடப்பாடியாரின் ஒவ்வொரு அசைவும் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா சமயத்தில் அதிமுக அரசு ரொம்பவே திணறிவிட்டது.. இதில் திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்கவும் நிலைமை இன்னும் மோசமானது... எனினும் படு மும்முரத்துடன் கொரோனா தொற்று விவகாரத்தை கையாண்டார் முதல்வர்.
மெல்ல மெல்ல குறைய தொடங்கினாலும், இன்னும் முழுமையாக குறையவில்லை.. அதேசமயம், லாக்டவுன் சமயத்தில் மக்களுக்கு அதிமுக அரசு மீது கோபம் இருந்ததையும் மறுப்பதற்கில்லை.

முதல்வர்
இந்நிலையில், 3 விஷயங்களில் எடப்பாடி அரசு சாதித்து காட்டி உள்ளது.. புதிய தொழில் முதலீடுகளில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியது.. அடுத்ததாக, நீர் மேலாண்மையிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.. கொரோனா பரிசோதனையிலும் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.. இதனால் எடப்பாடியாருக்கு நாலாபக்கமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தேசிய விருது
2-வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா வரும் நவம்பர் 11,12 தேதிகளில் நடைபெற உள்ளது.. மத்திய பாஜகவின் ஜல் சக்தி அமைச்சகம்தான் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த வருடம் தேசிய நீர் விருதினை தமிழக அரசுக்கு அறிவித்துள்ளது ஜல்சக்தி அமைச்சகம்.

சிக்கனம்
இந்த ஜல்சக்தி அமைச்சகம் என்பது, தண்ணீர் குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்துவதாக ஆரம்பிக்கப்பட்டது.. தண்ணீர் சிக்கனத்தில் சிறந்து விளங்கும் மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி, நகர்ப்புற ஊராட்சி என்று மொத்தம் 16 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன... அந்த வகையில்தான் தமிழகம் தேர்வாகி உள்ளது.

வேலூர்
அதேபோல, ஆறுகளை மீட்டெடுத்தல் பிரிவில் இந்திய அளவில் 2 மாவட்டங்கள் தேர்வாகி இருக்கின்றன.. அந்த 2 மாவட்டங்களுமே தமிழகத்தில் தான் உள்ளன. ஒன்று வேலூர் இன்னொன்று கரூர் ஆகும்.. இதைதவிர நீர் சேமிப்பு பிரிவில் பெரம்பலூர் 2வது இடத்திற்கும், நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மதுரையும் தேர்வாகி இருக்கின்றன.

இஸ்ரேல்
இந்த நீர் மேலாண்மைக்காகத்தான் முதல்வர் கடந்த வருடம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வதாக இருந்தார். இஸ்ரேல் நாட்டில் உள்ள நீர் மேலாண்மை திட்டம் குறித்து அறிந்து கொண்டு, அதை தமிழகத்தில் செயல்படுத்த போவதாகவும் சொன்னார்.. இதற்கு திமுக தலைவர், உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல், நீர் சிக்கனம் பற்றி அறிய முதல்வர் இஸ்ரேல் செல்வதாக கூறுவது வேதனையளிப்பதாக ஸ்டாலினும் கருத்து சொல்லி இருந்தார்.. ஆனால், இஸ்ரேல் போகாமலேயே நீர் மேலாண்மையில் நமக்கு முதலிடம் கிடைத்துவிட்டது.

முதல்வர் ட்வீட்
இதுகுறித்து முதல்வர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "நீர்மேலாண்மையில் 2019க்கான சிறந்த மாநிலமாக, ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதினை தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்நிலைகளை புதுப்பித்தலில் வேலூர்,கரூர் மாவட்டங்கள் முதல் இரு இடங்களையும், நீர்நிலைகளை பாதுகாப்பதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முதல்வருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

திமுக
எதையெல்லாம் திமுக அரசு விமர்சித்ததோ, கண்டனம் தெரிவித்ததோ, குற்றஞ்சாட்டிய அறிக்கை விட்டதோ அத்தனையும் இன்று பாசிட்டிவாக மாற்றி உள்ளார் எடப்பாடியார்.. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்றாலும், திமுகவும் இதற்கு இணையான சாதனையை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. குறிப்பாக, 10 வருடம் கழித்து ஆட்சியில் அமர வியூகம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தன் அதிரடியில் இன்னும் வேகமெடுக்கும் என்றே நம்பலாம்!
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications