வச்ச குறி தப்பாது.. இறங்கி அடிக்கும் எடப்பாடியார்.. இப்படி ஒரு கணக்கு இருக்காமே.. விழிக்கும் "கட்சி"
எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான் பெரிதும் பேசப்பட்டு வருகிறது
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு வியூகங்களும் எதிர்க்கட்சிகளை மட்டுமல்லாமல், கூட்டணி கட்சிகளையே மிரள வைத்து வருகிறதாம்.. அப்படி ஒரு சமாச்சாரம்தான் இப்போது கசிந்து வருகிறது..!
தேமுதிகவை பொறுத்தவரை எல்லாமே விஜயகாந்த்தான்.. ஜெயலலிதாவுக்கு பிறகு இவருக்குதான் துணிச்சல் நிரம்பி இருந்தது.. இப்போதுவரை தேமுதிக என்ற ஒரு கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றால், அது விஜயகாந்த் என்ற நல்ல இதயத்துக்காகத்தான்..!
ஆனால், விஜயகாந்த்தோடு சரி.. அவருக்கு உடம்பு முடியாமல் போனதுடன், கட்சி பெரிதாக வளரவே இல்லை.. அதை மீட்டெடுக்கும் முயற்சியிலும் தேமுதிக தரப்பில் யாரும் இறங்கவில்லை.. இப்போதைக்கு அந்த கட்சிக்கு 2 சதவீதம் வாக்கு மட்டுமே உள்ளது.. ஆனால் இதை வைத்து கொண்டு 41 சீட்டுகளை பிரேமலதா கேட்டு வருவதற்கான காரணம் இப்போது வரை யாருக்குமே புரியவில்லை.

கெத்து
பாமகவுக்கு எவ்வளவு தருகிறார்களோ, அதே அளவுதான் தங்களுக்கும் வேண்டும் என்று சென்ற எம்பி தேர்தலின்போதே கெத்து காட்டினார்கள்.. அப்போதே எடப்பாடியார் தரப்பு தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை.. "தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் நல்லது, வராவிட்டால் ரொம்ப நல்லது" என்று ஜெயக்குமார் சொன்னார்.. கடைசியில் பாஜகவின் ஆதரவால் கூட்டணிக்குள் ஒருவழியாக, அதிலும் கடைசியாக நுழைந்தது.

தேமுதிக
இப்போதும் கூட்டணி தொடர்பாக அதிமுக தரப்பில் பாமகவை அணுகினார்களே தவிர, தேமுதிகவை அணுகவில்லை.. அத்துடன், பிரேமலதாவும் சும்மா இல்லை.. "கூட்டணி குறித்து பேச தாமதிக்கிறார்கள்" என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.. "சசிகலாவை வரவேற்கிறோம்" என்று அடுத்த குண்டை தூக்கி போட்டார்.. "எடப்பாடி பழனிசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை" என்று இன்னொரு குண்டை தூக்கி போட்டார்.. இவ்வளவும் சொல்லிவிட்டு, மறுபடியும் 41 சீட்தான் வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறார்.

தனித்து போட்டி?
ஆனால், எடப்பாடியார் தரப்பு இவை எதையுமே கண்டுகொள்ளவில்லையாம்.. ஏனென்றால், தனித்து போட்டி என்ற முடிவை தேமுதிக எடுத்தால் அதை வரவேற்கவும் அதிமுக தயாராகிவிட்டதாம்.. இதற்கு காரணம், தேமுதிக தனித்து போட்டியிட்டால், நிச்சயம் திமுக கூட்டணியில் முரண்பாடுகள் ஏற்படும், அத்துடன் சில சிறிய கட்சிகளும் அதில் இணைய நேரிடும்.. அப்படி 3வது அணி ஒன்று அமையுமானால், அது கண்டிப்பாக அதிமுகவைவிட திமுகவை தான் அதிகம் பாதிக்கும் என்பதே எடப்பாடியாரின் "மாஸ்டர்" கணக்கு..!

திமுக
அதாவது, 2016-ல் தேமுதிக தலைமையில் அமைந்த 3-வது அணி எப்படி திமுகவுக்கு பாதிப்பை தந்ததோ, இந்த முறையும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதாக நம்புகிறார்.. அதனால் தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் சரி, அல்லது 3வது அணி அமைத்தாலும் சரி, அத்தனையும் தனக்கு சாதகமாகும் என்று முதல்வர் யோசித்து வருகிறாராம்.. யாராக இருந்தாலும், கூட்டணிக்குள் முதலில் இழுத்து போடும் வேலையைதான் பார்ப்பார்கள்.. ஆனால், கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு, அதன்மூலம் வெற்றியை நிர்ணயிக்க எடப்பாடியார் மேற்கொண்டு வரும் இந்த மாஸ்டர் யுக்தி, மொத்த கட்சிகளையும் அசரடித்து வருகிறதாம்..!












Click it and Unblock the Notifications