கருணாஸ் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? சபாநாயகருடன் முதல்வர் திடீர் ஆலோசனை
சென்னை: சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அறிவித்த நிலையில், இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்படுவதால், அதுகுறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்றும், கருணாஸ் உட்பட அரசுக்கு எதிராக செயல்படும் சில எம்எல்ஏக்கள் விவகாரம் குறித்து ஆலோசித்திருக்கலாம் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்கு எதிராக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு, நோட்டீஸ் அனுப்பி சபாநாயகர் விளக்கம் கேட்க வேண்டும் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில், ஆலோசனை நடைபெற்றுள்ளது.
[மொழி வழி மாநிலமாக பிரிந்த பின் உயர்ந்துள்ளதா தமிழகம்?]
20 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிப் பொறுப்பாளர்களை அதிமுக ஏற்கனவே நியமனம் செய்துள்ளது. அமைச்சர்கள் அந்த குழுக்களில் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications