Keezhadi: இந்தியாவிலேயே முதல் முறையாக.. கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியத்தை திறந்து வைத்த ஸ்டாலின்
சென்னை: கீழடியில் ரூ. 24.30 கோடி மதிப்பீட்டில், 4.5 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகள் இணைந்து பல கட்டங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின் குடியிருப்புகள், கட்டிட அமைப்புகள், கருவிகள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த ஆய்வுகள் தமிழர் நாகரிகம் மிகப் பழமையானதும், முன்னேறிய நகர்ப்புற வாழ்க்கை முறையுடனும் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்தன. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை அப்படியே பாதுகாத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 67,348 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கீழடியில் அகழாய்வுகளின்போது, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அருங்காட்சியத்துக்கு வந்து தொல்பொருள்களை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
மேலும், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ. 22 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை பொது மக்கள் நேரில் காண உள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியம் முன் அலங்காரத் தோரண வாயிலும், அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள 'கீழடி நம் தாய்மடி' என்ற வாசகத்துடன் தென்னை மரத்துடன் கூடிய செல்ஃபி பாயிண்ட்டும் தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
-
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications