விவசாயிகளுக்கு பேரிழப்பு.. நெல் ஜெயராமனுக்கு முதல்வர் இரங்கல்.. அமைச்சர்கள், ஸ்டாலின் அஞ்சலி
Recommended Video

சென்னை: நெல் ஜெயராமனின் இறப்பு விவசாயிகளுக்கு பேரிழப்பு என முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
174 வகை நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியவர். மரபு வகை விதை மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்.

அஞ்சலி
கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜெயராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு
நெல் ஜெயராமன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அது போல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது காமராஜ் கூறுகையில் நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

அஞ்சலி
அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். விவசாயிகளின் பாதுகாவலர்களாக தமிழக அரசு விளங்குகிறது என்றார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், எம்எல்ஏ தனியரசு, நடிகர் கார்த்தி, ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கருத்து
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் நெல்ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். நெல்ஜெயராமனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் என்று தெரிவித்தார். நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு தி. வேல்முருகன் ரூ 1 லட்சத்தை அளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications