தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்.. ஸ்டாலின் அழைப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழ்நாட்டில் வீடுகளில் கறுப்புக்கொடி பறக்கவிட்டு போராட்டம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில் அண்டை மாநிலத் தலைவர்கள் கூட அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தொகுதி மறுவரையறையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள்! பழனிசாமி யார் பக்கம்? கடைசி வரை கோழையாக, டெல்லியின் அடிமையாக இருக்கப் போகிறீரா? இப்போது பேசாமல் எப்போதுதான் பேசுவீர்கள்?

வரலாறு உங்களுக்குத் தந்திருக்கும் கடைசி வாய்ப்பு இது. ஒரு முறை, ஒரேயொரு முறை பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுங்கள். உறுதியான எஃகுக்குப் பெயர் பெற்ற சேலத்தில் பிறந்துவிட்டு, இப்படி முதுகு வளைந்தே இருக்க அவமானமாக இல்லையா? #Delimitation கொண்டு தமிழர்களைத் தாக்குகிறது NDA எனும் New Delhi Alliance. ஏப்ரல் 23 வாக்குப்பதிவில், அவர்களுக்கு நாம் யாரென்று காட்டுவோம்! அதற்கான ஒத்திகையாக கருப்புக்கொடி ஏற்றுவோம்! டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும் எதிர்ப்பில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆகவேண்டும்!
இந்த நிலையில் கூட பேசாமல் இருக்கும் பழனிசாமி, பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு நேரடியாகப் பா.ஜ.க.வில் இணைந்துவிடலாமே? இனியும் உங்களைத் தடுப்பது எது?, என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஸ்டாலின் வீடியோ
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து பற்றி சொல்லவும், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தான் இந்த வீடியோ. தேர்தல் பிரச்சாரத்திற்காக அல்லாமல், ஓடிக்கிட்டே இருந்தால், இந்த கடமை தவிர்க்க முடியாதது. நாளை மறுநாள் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை என்கிற சட்டத்திருத்தத்தை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப் போகிறார்கள் என்று முதலில் இருந்தே நாம் தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
உத்தரவாதம் அளிக்காத மோடி
தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பாதிப்படையக் கூடிய மாநிலங்களின் முதல்வர்களையும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்தினோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள், அளவாக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள், குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் என்று மத்திய அரசு கூறியதை நாங்கள் கேட்டோம்.
சொன்னதை ஒழுங்காக செய்ததற்காகவே எங்களுக்கு தண்டனை கொடுப்பீர்களா? தென் மாநிலங்கள் எல்லாம் பாதிப்படையாது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. நாம் சொன்ன எதையும் காதில் வாங்காமல், திமுகவோடு மட்டுமல்ல, எந்தக் கட்சியோடும் எந்த மாநிலத்தோடும் கலந்து ஆலோசனையை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்திற்கு செய்யப் பார்க்கிறார்கள்.
தமிழக எம்பிக்கள் பங்கேற்பார்களா?
நேற்று மரியாதைக்குரிய சோனியா காந்தியும், நாம் கேட்டிருந்த அதே கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். இப்படி அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய நினைப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். மாநில உரிமைகளை மத்திய அரசு படுகொலை செய்திருக்கிறது. இந்த தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை. அந்த சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இப்படி மறைத்து மறைத்து செய்வதால், ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் வலுவடைகிறது. தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் இருந்து எங்கள் எம்பிக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டை பாதிப்பதை மாதிரியோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்குகிற மாதிரியோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாக காட்டும். முதல்வரான என்னுடைய தலைமையில் தமிழ்நாடே போராடும். ஒவ்வொரு தெருவிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் போராடுவார்கள். இதனை பிரதமர் மோடிக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
இவர் முடிவெடுத்தா.. மோடியின் தொகுதி வரையறை பிளான் தோற்கும்? சந்திரபாபு கையில் தென்னிந்திய எதிர்காலம் -
எங்க மாநிலத்தில் இப்படி இல்ல! ஸ்டாலின் பேச்சு புல்லரிக்க வைக்குது! புகழ்ந்த தென்னிந்திய நெட்டிசன்ஸ் -
"நெருப்போடு விளையாடாதீர்கள்!".. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.. தமிழக தலைவர்களின் நிலைப்பாடு என்ன? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?












Click it and Unblock the Notifications