பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி.. கல்வி என்றால் ஏன் கசக்கிறது? விளாசிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் துரோகம் செய்வது மட்டும்தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜகவின் ஒரிஜினல் குரலாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டதாக கூறிய ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பழநியில் செயல்படும் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்களை மயக்கத்தில் சென்று திறந்து வைத்துவிட்டு வந்தீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் வந்தார். நேற்று ஸ்டாலினின் ரோடு ஷோ நடந்த நிலையில், இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் ரூ.846 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளில் 1,234 முடிவுற்ற பணிகளாஇ தொடங்கி வைத்தார். அதேபோல் 2,423 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

CM Stalin accused Edappadi Palanisamy of knowing only how to betray and acting as the true voice of the BJP

ஸ்டாலின் பேச்சு

அதேபோல் 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கருணாநிதி ஆட்சியின் நீட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சொஇ. அமைச்சர் டிஆர்பி ராஜாவின் செயல்பாடுகளால் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டைச் நோக்கி தொழிற்சாலைகள் வருவதால், வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதிமுகவையே மீட்க முடியாதவர்

அதேபோல் அதிமுகவை மீட்க முடியாத எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை மீட்போம் என்று பயணம் மேற்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று சொல்லும் கூட்டத்துடன் அதிமுகவை சேர்த்துவிட்டார். உங்களிடம் இருந்து ஏற்கனவே தமிழ்நாடு மீண்டுவிட்டது. ஆட்சியில் அமர்த்தியவர்களுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. செய்த குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக பாஜகவிடம் தமிழ்நாட்டையே அடகு வைத்தவர்.

துரோகம் மட்டுமே இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் துரோகம் செய்தது மட்டும்தான். அதிமுகவுக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கூட்டணி வைத்தீர்கள். நம்ம பசங்க படிப்பதற்கு தேவையான கல்வி நிதியை கூட பாஜக கொடுக்கவில்லை. கீழடி ஆய்வறிக்கையை கூட வெளியிட மறுக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர்களுடன் கூட்டணி வைத்து கொண்டு எப்படி கூச்சமே இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடிகிறது?

மயக்கத்தில் இருந்தீர்களா?

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பள்ளி, கல்லூரிகள் கட்டக் கூடாதாம். இத்தனை நாட்களாக பாஜகவிற்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்ஸாகவே மாறிவிட்டார். அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்க சட்டம் உள்ளது. இது தெரியாமல் எப்படி முதலமைச்சராக இருந்தீர்கள்? 2017ஆம் ஆண்டு பழநியாண்டவர் கல்லூரிக்கு கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்த போது மயக்கத்தில் இருந்தீர்களா?

படிப்பு கசக்கிறதா?

பாஜக தலைவர்கள் கூட கல்லூரி தொடங்க கூடாது என்று பேசுவதில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பேச தொடங்கிவிட்டார். வடிவேலு படத்தில் வரும் காமெடியில், கொடுத்த காசுக்கு மேல் கூவுறான்டா என்பதை போல், பாஜகவினரே பேசிக் கொள்கிறார்கள். ஏன் படிப்பு என்றால் உங்களுக்கு அவ்வளவு கசக்கிறது? துரோகம் செய்துவிட்டு என்ன பயணம் செய்தாலும், மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+