விஜய் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதா? எப்போது வந்தது? விரிவாக விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்ற நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென அதிமுக கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதாக எழுந்த புகார் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார். கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் அங்கு வரவில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு உச்ச நீதிமன்றத்தால் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நேற்று தமிழ்நாடு சட்டசபை கூடியது. இரண்டாம் நாள் நிகழ்வான இன்று கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது.

கரூர் கூட்ட நெரிசல்
காலை ஒன்பது முப்பது மணிக்கு அவை கூடியதும் 10:30 மணி முதல் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். ஆனால் உறுப்பினர்கள் பேசுவதற்கு முன்னரே முதல்வர் விளக்கம் அளித்தது ஏன் என கேட்டு அதிமுகவினர் கடும் அமலியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபை
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சட்டசபையில் உரையாற்றிய அவர்," கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது. சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பகல் 12 மணிக்கே விஜய் வருவார் என தவெக பொதுச்செயலாளர் அறிவித்தார். கரூர் பிரசார கூட்டத்துக்கு விஜய் 7 மணிநேரம் தாமாக வந்தார்.
மு.க.ஸ்டாலின்
விஜய் கூட்டத்துக்கு 10,000 பேர் வருவர் என தவெகவினர் தெரிவித்தனர். ஆனால் அதிகம் பேர் கூடுவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கும் பாதுகாப்பை விட கூடுதலாகவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது.காவலர்கள், அதிகாரிகள் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்துக்குள் செல்லவில்லை. மீட்பு பணி நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவெகவினர் தாக்கினர்.
ஆம்புலன்ஸ் விவகாரம்
கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தவெகவினர் சேதப்படுத்தினர்; இதனால் ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்தார். கரூர் துயர சம்பவம் அறிந்த என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.
200 காவல்துறையினர் மருத்துவமனைக்கு பாதுகாப்பும் வழங்கினர்." என்றார்.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications