Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பேரிழப்பு.." முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு.. முதல்வர் நேரில் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் நேற்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாட்டில் தற்காலத்து முக்கிய தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர் அவ்வை நடராஜன். 85 வயதான இவர் நேற்று இரவு வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ள இவர், டெல்லி அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

 துணை வேந்தர்

துணை வேந்தர்

1975 முதல் 1984 வரை தமிழக அரசின் மக்கள் தொடர்பு துறை துணை இயக்குநராக பணியாற்றிய இவர், அதன் பின்னர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாத ஒருவர் ஒரு துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை. இதைத் தொடர்ந்து 1992-1995 வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் இவர் பணியாற்றினார்,

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

2014இல் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இதற்கிடையே 85 வயதாகும் இவர் வயது மூப்பு பிரச்சினைகளால் ஏற்படும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முன்னதாக அவ்வை நடராஜன் மறைவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "சிறந்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். ஒளவை நடராசன் அவர்கள் 'உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவித்தவர் தமிழில் இவருக்கிருந்த ஆழங்காற்பட்ட புலமையால், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட பல பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன.

 பேச்சாற்றல்

பேச்சாற்றல்

தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழார்வலர்கள் இருக்க முடியாது. தமது பேச்சாற்றலால் உவமைக் கவிஞர் சுரதா அவர்களாலேயே பாதி அண்ணா' எனப் பாராட்டப்பட்டவர். ஔவை நடராசன் கருணாநிதி மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். கருணாநிதி மறைந்தபோது நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழாரம் சூட்டியவர். தமது இறுதிக்காலம் வரையிலும் கருணாநிதியின் புகழைப் போற்றி வந்தவர்.

இரங்கல்

இரங்கல்

தமது தமிழ்ப் பணிகளுக்காகப் பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை ஔவை நடராசன் அவர்கள் பெற்றிருந்தார். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை ஒளவை நடராசன் அவர்களின் மறைவு தமிழ்த்துறையினருக்கும், கல்விப்புலத்தாருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+